40 வயதிற்கு பிறகு காதலிப்பது எப்படி? இதாே ஈசியான 5 டேட்டிங் டிப்ஸ்!
Love Tips Tamil: 16 முதல் 60 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் காதல் வரலாம். அப்படி 40 வயதிற்கு பிறகு வரும் காதலை கையாள்வது எப்படி?
உலகம் நாளுக்கு நாள் பரிமான வளர்ச்சி பெற்று மெருகேருவது போல, மனித உறவுகளும் பல வளர்ச்சிகளை கண்டு விட்டன. அப்படி பல கட்டங்களை தாண்டி வளர்ந்த உறவுக்கு பெயர்தான், காதல். பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல்..போன்ற நிலை எல்லாம் தற்போது இல்லை. தங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் முதலில் அவருடன் பழக வேண்டும், பின்னர் அவரது குணாதிசயம் பிடித்திருந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம் எனும் நிலையில்தான் பலர் உள்ளனர். இளமை காலத்தில் பலரை டேட் செய்து பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளும் பலர், 40 வயதிற்கு பிறகு காதலையும்-டேட்டிங்க் வாழ்க்கையையும் எப்படி கையாள்வது என்று தெரியாமல் திணருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கான டிப்ஸ்தான் இது.
1.அவசரம் வேண்டாம்...
40களில் டெட்டிங் செய்வது உங்கள் வாழ்க்கை பயணத்தை அனுபவிக்க உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும். வயதாகிவிட்டது என்பதற்காக பெரிய உறவுக்குள் நுழைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்காக அவசரப்படவும் வேண்டாம். மெதுவாக, உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இருவரும் எது பிடிக்கும் பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், இப்படி மெதுவாக ஒரு விஷயத்தை எடுத்து செல்வது உங்கள் உறவில் ஆழமான அன்பை உருவாக்க உதவி செய்யும்,
2.காரணங்களை பெரிதாக ஆராய வேண்டாம்..
40 வயதை கடந்த பிறகு டேட்டிங் செய்பவர்களுக்கு பின்னால் பல கதைகள் இருக்கலாம். அவர் விவாகரத்து பெற்றவராக இருக்கலாம், இளமை காலங்களில் காதல் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது தொழிலை விரிவாக்கியவராக இருக்கலாம். நீங்கள் 40 வயதை கடந்தவராக இருந்தாலும், நீங்கள் டேட்டிங் செய்பவர் 40 வயதை கடந்திருந்தாலும் அவரது கடந்த காலம் குறித்து பெரிதாக பேச வேண்டாம்.
மேலும் படிக்க | அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்கணுமா? அப்போ இந்த மேஜிக் விதை போதும்
3.நீங்கள் நீங்களாக இருக்கலாம்..
40களில் டேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போது பிறர் முன்னிலையில், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் நிறை குறைகளை கூச்சப்படாமல் வெளிக்காட்ட வேண்டும். இப்படி, ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கும் உங்களால் பலர் ஈர்க்கப்படுவார்கள். இது, பல அர்த்தமுள்ள உறவுகளுக்கு உங்களை அழைத்து செல்லும். பெரும்பாலான சமயங்களில் வெளிப்படையாக இருப்பது உங்களை நல்ல மனிதராக பிறரிடம் காண்பிக்கும்.
4.உங்களை நீங்கள் முதன்மை படுத்திகொள்ள வேண்டும்:
உங்களை நீங்கள் முதன்மை படுத்திக்கொள்வது மூலம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உங்களது உடல் மற்றும் மன நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். தினசரி உடற்பயிற்சி, டயட் இருப்பது, நன்றாக உறங்குவது, பிடித்த விஷயங்களை செய்வது அனைத்துமே உங்களுக்காக நீங்கள் செய்து கொள்ளும் நல்ல விஷயங்கள் ஆகும். பிடித்தவரை தேடுவதற்கு முன்பு, உங்களுக்கு சரியானவராக, உங்களுக்கு பிடித்தவராக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்.
5.சகஜமாக பழகவும்..
40களில் மட்டுமல்ல, எந்த வயதிலும் வீட்டிற்குள்ளேயே இருந்தால் உங்களது டேட்டிங் வாழ்க்கை மேலோங்கும். எனவே, பயணம் மேற்கொள்வது, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது, நண்பர்களை அடிக்கடி மீட் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். டேட்டிங்கிற்கென்று சில ஆப்களும் இருக்கிறது. அவற்றில் உங்களது பாதுகாப்பு குறித்த விவரங்களை சரி செய்த பிறகு கணக்கை தொடங்கவும். உங்களுக்கென்று ஒரு வட்டத்தை போட்டு அதில் வாழாமல், அனைவருடனும் சகஜமாக பழகவும்.
மேலும் படிக்க | தொள தொள தொப்பை.. மளமளன்னு குறையணுமா? அப்போ இந்த மேஜிக் விதைகளை சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ