How To Be Lucky In Life : நம்மில் பலருக்கு, வாழ்க்கை பல அரிய விஷயங்களை பரிசாக கொடுத்திருக்கும். அது, நமக்கு கிடைத்த பொக்கிஷம் போன்ற உறவுகளாக இருக்கலாம், அல்லது எதிர்பாராமல் கிடைத்த நல்ல வேலையாக இருக்கலாம். எது கிடைத்திருந்தாலும், சிலர் பல முறை “நமக்கு ஏன் வாழ்க்கையில் அதிர்ஷ்டமே அடிக்க மாட்டேங்குது..நமக்கு மட்டும் ஏன் எல்லாமே தப்பு தப்பா நடக்குது..” என்று யோசித்து கொண்டிருப்பர். ஆனால், கொஞ்சம் நமது மன நிலையை மாற்றிக்கொண்டாலே போதும் நம் பக்கம் எப்பாேதும் அதிர்ஷ்ட காற்று அடித்துக்கொண்டே இருக்கும். நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? அதிர்ஷ்டம் நம் பக்கம் திரும்ப, நாம் என்ன செய்ய வேண்டும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நன்றியுணர்வு:


நமக்கு, எத்தனையோ வகைகளில் வாழ்க்கை நல்ல முறையில்தான் பயணித்து கொண்டிருக்கும். ஆனால், அதையெல்லாம் அனுபவித்துக்கொள்ளும் நாம், அதற்கு நன்றியுணர்வுடன் இருப்பதே இல்லை. அப்படி நாம் செய்யாமல் இருந்தால் நம்மிடம் தங்கும். அப்படி இல்லை என்றால் அது வெகு விரைவிலேயே நம்மை விட்டு சென்று விடும். 


வாய்ப்புகளை எதிர்நோக்கி இருத்தல்:


நம் வாழ்க்கை, எப்போதும் ஒரே படகில் ஒரே மாதிரியாக சென்று கொண்டிருக்காது. அப்படி சென்று கொண்டிருந்தால் அதை “comfort zone” என்று கூறுவார்கள். இப்படி இருக்காமல், உங்களுக்கு பிடிக்காத, உங்களுக்கு வாராத விஷயங்களை செய்யவும் உங்களை நீங்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய அனுபவங்களை பெறுவதற்கு எப்போதும் திறந்த மனதுடன் காத்திருக்க வேண்டும். 


உறவுகளை வளர்த்தல்:


வெவ்வேறு வாழ்வியல் சூழலில் இருந்து வரும் மனிதர்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலம், உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். அந்த நட்பு, உங்களுக்கு வாழ்வில் என்னென்ன பரிசுகளை தரும் என்பது உங்களுக்கே தெரியாது.


பாசிடிவான மனப்பான்மை:


உங்கள் வாழ்வில் எப்போதும் பாசிடிவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். நம்பிக்கை உணர்வுடன் இருப்பது, உங்களை கடினமான தருணங்களை எளிதாக கடக்க உதவுவதோடு, எப்போதும் புது வாய்ப்புகளில் உங்களை நிலையாக இருக்கவும் செய்திருக்கும். 


கற்றல்:


கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது போல, உங்கள் அறிவுப்பசி தீறாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் ஒரே வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும், பல்வேறு கட்டங்களையும் எட்ட முடியும். 


ஆபத்துகளை எதிர்கொள்ளுதல்:


பலர், ஆபத்தான கட்டங்களை தாண்ட கூடாது என்பதற்காகவே அது போன்ற தருணங்கள் வராமல் பார்த்துக்கொள்வர். ஆனால், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து சில விஷயங்களை செய்தால்தான், உங்களுக்கு வேண்டிய விஷயம் கையில் கிடைக்கும். அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் வீசும். 


பிறருக்கு உதவுதல்:


நீங்கள் பிறரிடம் அன்பாக இருப்பதும், உதவி மனப்பான்மையுடன் இருப்பதும் கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது ஒரு நாள் பன்மடங்காக வந்து சேரும். இதனால், உங்களுக்கு எதிர்பாராத வகையிலும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். 


மேலும் படிக்க | வயாகரா போட்டாலும் பிரச்சனை, போடவில்லை என்றாலும் பிரச்சனை -என்ன செய்வது?


வெற்றி குறித்து கனவு காணுதல்:


நீங்கள் வைத்திருக்கும் இலக்குகளை, ஏற்கனவே நீங்கள் எட்டிவிட்டது போல நினைத்து பாருங்கள். இப்படி கனவு காண்பது உங்களுக்கு பெரும் உந்துதலாக அமையும்.


விடாமுயற்சி:


“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” என கேள்வி பட்டிருப்போம். அதை உண்மையாக்கும் வகையில், உங்களுக்கு எந்த விஷயம் வேண்டுமோ அதை நோக்கி விடாமல் முயன்று கொண்டே இருங்கள். 


ஆராய்ந்து செயல்படுதல்:


உங்கள் வாழ்க்கையில், எந்த விஷயம் உங்களுக்கு ஏற்றவாறு செல்கிறது, எது ஏற்றவாறு செல்லவில்லை என்பதை உற்று நோக்க வேண்டும். அப்படி ஒரே மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது என்றாலோ, அல்லது ஒரு மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தாலோ அப்போது நீங்கள் பாதையை மாற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | மனைவி அடிக்கடி கோபப்படுவதற்கு கணவர் செய்யும் இந்த தவறுகளே காரணம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ