40 வயதிற்குள் பணக்காரர் ஆகிவிட வேஎண்டும் என்ற ஆசையுடன் பலர் சுற்றி வருகின்றனர். யார் மனது வைத்தாலும், 40 வயதிற்குள் ஒருவர் பணக்காரர் ஆவதற்கு பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதற்கு புத்திசாலித்தனமான திட்டமிடல்களும், சரியான சேமிப்பும், சரியான முதலீடுகளும் தேவை. அப்படி பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனித்து இயங்கும் இயல்பை கொண்டவர்களாகவும் இருப்பது நல்லது. அப்படி, 40 வயதிற்குள் தான் நினைத்தது போல பணத்தை சம்பாதித்து மில்லியனர் ஆக வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பவர்களுக்கான டிப்ஸ் இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி குறித்த இலக்குகளை அமைத்தல்:


40 வயதிற்குள் பணக்காரர் ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள், முதலில் தெளிவான நிதி திட்டமிடல்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது இலக்கு என்னவோ அது குறித்த தெளிவான புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 40 வயதிற்குள், எந்தெந்த துறைகளில் முதலீடு செய்ய வேண்டும், எந்த அளவிற்கு பணத்தை சேமிக்க வேண்டும் குறித்த திட்டமிடல்கள் இருக்க வேண்டும். இதற்கென்ற காலக்கோடுகளையும் போட்டு வைக்க வேண்டும். அனைத்தையும் தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் எதிலாவது எழுதி அதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மனதில் வைத்துள்ள இலக்கையும் எழுதிக்கொள்ளலாம். இதனால், நீங்கள் ஒன்றை நோக்கி பயணிக்கும் போது உங்கள் கவனம் வேறு எதிலும் சிதறாமல் இருக்கும். 


உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும்:


செல்வத்தைக் அதிகரிப்பதற்கான மிகவும் எளிமையான வழிகளில் ஒன்று, நீங்கள் சம்பாதிக்கும் திறனை அதிகரிப்பதாகும். உங்கள் தொழிலில் முன்னேற நீங்கள்தான் வாய்ப்புகளைத் தேட வேண்டும். வேலை செய்து கொண்டிருக்கும் போதே, புதுப்புது திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் கற்றுக்கொண்ட திறன்களைப் பெறுவதன் மூலம் நீங்கள் தனி நபராக வளர்வது மட்டுமன்றி, நீங்கள் எந்த தொழிலில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதிலும் வெற்றி அடையலாம்.  முழு நேர வேலை செய்தாலும், உங்களது திறனுக்கு ஏற்ற ஒரு வேலையையும் உங்களது ஃப்ரீ டைமில் செய்யலாம்.  பல வகைகளில் இருந்து வருமானம் வருவது, உங்களது சேமிப்பையும் முதலீடுகளையும் அதிகரிக்கும். இதனால், நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும் என்ற கணவையும் எளிதில் அடைய முடியும். 


மேலும் படிக்க | கோடிக்கணக்கான SBI வாடிக்கையாளர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


வசதியான வாழ்க்கை வேண்டாம்:


பணத்தை சேமிப்பதாலும், அவற்றை முதலீடு செய்வதாலும் மட்டும் செல்வம் பெருகாது. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதும் நமது செல்வத்தை சேமிக்கவும் பெருக்கவும் ஒரு வழியாகும். நீங்கள் என்னென்ன செலவுகள் செய்கிறீர்கள் என்பதையும் தேவைப்படாத பொருட்களை வாங்கி குவிக்கிறோமா என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு சேமிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் பலதரப்பட்ட துறைகளில் முதலீடு செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 


புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்:


செல்வத்தை பெறுக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது, முதலீடு. பலதரப்பட்ட துறைகளில் முதலீடு செய்வதனால் வருமானத்தை பெருக்க முடியும். ஸ்டாக்ஸ், பாண்டுகள், வீட்டு மனை வாங்குதல், சொத்துக்களை வாங்குதல் போன்றவை நல்ல முதலீட்டிற்கான வழியாகும். ஆரம்பத்திலேயே, நீண்ட கால முதலீட்டி உறுதியாக இருக்க வேண்டும். இதன் மூலம் வரும் வருமானமும், நீங்கள் எளிதில் பணக்காரர் ஆக பல வழி வகைகளை ஏற்படுத்தி தரும். முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன்னர், நிதி ஆலோசகர் அல்லது அது குறித்து திட்டமிடுபவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. 


புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்:


இந்த உலகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. நிதி குறித்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கு நம்மை சுற்று என்ன நடக்கிறது, புதிதாக மார்கெட்டில் உள்ள விஷயம் என்ன என்பது குறித்த தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உத்திகளைப் பற்றி அறிந்துகொள்வது, தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ளவும், உங்கள் நிதி அபாயங்களைக் குறைக்கவும் மற்றும் உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும்.


பொறுமையே பெருமை:


40 வயதிற்கு முன் நீங்கள் கோடீஸ்வரராக மாற, உங்களுக்கு பல வருட கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருங்கள், பின்னடைவுகள் அல்லது தற்காலிக நிதி சவால்களால் சோர்வடைய வேண்டாம். இறுதியில் நல்ல முடிவே வரும் என்ற நம்பிக்கையையும் நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! FDக்கு இவ்வளவு வட்டியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ