இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
பலருக்கு இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இங்கே தெரிஞ்சுக்கோங்க..
தற்போது இளம் தலைமுறையினர் பலரால் அதிகம் உபயோகிக்கப்படும் சமூக வலைதளமாக இருக்கிறது இன்ஸ்டாகிராம். இந்த தளத்தில், 13 வயதினர் முதல் முதியவர்கள் வரை பலர் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்த தளத்தின் மூலமாக பலர் பிரபலமாகி, பின்னர் பெரிய திரையில் தோன்றுமளவிற்கு வளர்ந்து விட்டனர். ஒரு சிலர், இதன் மூலம் தொழிலதிபர்களாக கூட மாறியிருக்கின்றனர். இதனால், இன்ஸ்டாகிராம் தளத்தில் எப்படி பிரபலமாக வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள்:
நீங்கள், உங்களுக்கான நிரந்தரமான ஃபாலோவர்ஸை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கான பிராண்டிங்கை விரிவாக்க வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் எதை பிரபலப்படுத்த நினைக்கிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். சமூக வலைதளத்திற்கான உத்திகளை உபயோகித்து உங்கள் பதிவுகளை வித்தியாசமாக கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, நீங்கள் நன்றாக நடனமாடுபவராக இருந்தால், தொடர்ந்து வித்தியாசமாக வீடியோக்களை பதிவிட வேண்டும். வைரலாகும் ஆடியோவை வைத்தும் நடனமாடி ரீல்ஸ் போடலாம்.
முக்கிய இடத்தை உருவாக்குதல்:
இன்று ஒரு தலைப்பை பற்றி பேசிவிட்டு, நாளை வேறு ஒரு தலைப்பை பற்றி பேசினால் உங்களுக்கு ரெகுலரான பின்தொடர்பாளர்கள் வரமாட்டார்கள். எனவே, உங்களுக்கு எது வருமோ அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு கதை சொல்லப்பிடிக்கும் என்றால், தினசரி கதை மட்டும்தான் சொல்ல வேண்டும். இடையிடையே வெவ்வேறு வீடியோக்களை பதிவிட்டால் உங்கள் ஃபாலோவர்ஸ் குழம்பி விடுவர்.
உண்மையாக இருக்க வேண்டும்:
கேமராவிற்கு முன்னர், உண்மையாக இருக்க வேண்டும் என்பது கடினமான காரியம்தான். ஆனால், நீங்கள் பொய்யான ஒரு நபராக தோன்றி வீடியொ போடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான ஃபாலோவர்ஸ் பெரிதாக இணைய மாட்டார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறீர்கள் என்றால், உண்மையாக நிங்கள் நினைத்ததை கூறினால்தான் உங்கள் ஆடியன்ஸ் உங்களுடன் இருக்கும் இணைப்பை கண்டுகொள்வர்.
உங்கள் ஆடியன்ஸிடம் கேளுங்கள்:
நீங்கள், உங்கள் ஆடியன்ஸிற்கு பதில் சொல்லும் கிரியேட்டராக இருப்பீர்கள். உங்களை நம்பி உங்களை ஃபாலோ செய்பவர்கள், நல்ல கண்டண்டிற்காகத்தான் உங்களை பின் தொடருவர். அதனால், நிறைய பேர் ஃபாலோ செய்து விட்டார்கள் என்பதற்காக ஏதோ ஒரு பதிவை வெளியிடக்கூடாது. எனவே, அவர்கள் உங்கள் வீடியோவை அல்லது கண்டண்டை வளர்த்து விட ஏதேனும் விமர்சனம் கொடுத்தால் அதை கேட்டுக்கொண்டு, அடுத்த முறை அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | மஞ்சள் மஞ்சளாய் இருக்கும் பற்களை வெள்ளை வெளீராக மாற்றலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
சிறிய பிராண்டுகளுடன் நட்பு:
இன்ஸ்டாகிராம் மூலம் செய்யும் வணிகத்தை Influencer Marketing என்று கூறுவர். உங்களுக்கான குறிப்பிட்ட பிராண்டை உருவாக்கியவுடன் சிறிய பிராண்ட் வைத்திருப்பவர்களுடன் சேர்த்து மார்கெட்டிங் செய்ய வேண்டும்.
உங்கள் ஃபாலோவர்ஸுடன் உரையாடுதல்:
ஒரு பதிவை வெளியிடுகிறீர்கள் என்றால், உடனே ஆஃப்லைன் சென்று விடக்கூடாது. உங்கள் பதிவு வெளியிடப்பட்டவுடன், வரும் கமெண்டுகள் மற்றும் லைக்ஸுகளை பார்க்க வேண்டும். தேவையற்ற மெசெஜ்களை தவிர்த்து, உங்களுக்கு உபயோகமாக வரும் மெசஜ்கள்ளுக்கு ரிப்ளை செய்ய வேண்டும். அது மட்டுமன்றி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேள்வி-பதில் ஸ்டிக்கரை சேர்த்து அதற்கு நீங்கள் கொடுக்கும் பதில்களை உங்கள் ப்ரொஃபைலில் ஹைலைட்டாக சேர்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ