விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமா..? இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் போதும்..!
பணக்காரராக வேண்டுமா? இங்குள்ள வழிமுறைகளை தினசரி வாழ்க்கையில் உபயோகியுங்கள்.
ஏறக்குறைய நம்மில் எல்லோருக்கும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஏனெனில் பணம் சம்பாதித்தால் மட்டும் பத்தாது. உங்கள் செல்வத்தை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
பணத்தை சேமிக்கும் பழக்கம்:
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது உங்கள் பற்களை வலுவாக்க உதவுகிறதோ, அதே போல தினமும் சேமிக்கும் பழக்கம் உங்கள் வாழ்க்கையை வலுவாக்க உதவும். சேமிப்பு மற்றும் சிக்கனம் ஆகியவை பணக்காரர்களாக மாறுவதற்கான முக்கிய பழக்கங்களாகும். நீங்கள் சேமிக்கும் பணத்தினை தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது. பணத்தை சேமித்து பணக்காரர் ஆவது எப்படி..? இதை படியுங்கள்.
1. சிக்கனத்தைப் பழகுங்கள்:
செல்வத்தை பெருக்கும் பழக்கங்களில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. பேரம் பேசுவது, எல்லோரும் ஒரு பொருளை வாங்கி விட்டார்கள் என்பதற்காக அதை வாங்காமல் இருபப்து போன்றவை சிக்கனத்தின் சில நடைமுறை உதாரணங்களாகும். எளிமையாக வாழ்வது, உங்கள் வாழ்க்கையையும் உங்களை ஒரு மனிதராகவும் உயர்த்திக்கொள்ள மிகவும் உதவும்.
2. முதலீடு செய்ய தொடங்குங்கள்:
சிக்கனமாக இருப்பது பணத்தை சேமிப்பதற்கான வழிதான். சேமித்த பணத்தில் இருந்து சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனம். முதலீடு செய்ய பல வகைகளும் வாய்ப்புகளும் உள்ளன. பங்கு முதலீடுகள், கடன் முதலீடுகள், தங்கம், வெள்ளி போன்ற சொத்துக்கள் போன்ற நல்ல முதலீட்டு வாய்ப்பைத் தேடுங்கள் மற்றும் உங்கள் சேமிப்பு பணத்தை வைத்து சம்பாதிக்க தொடங்குங்கள்.
3. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருங்கள்:
‘அறிவே ஆற்றல்’ என கூறுவார்கள். நீங்கள் உங்கள் செல்வத்தை பெருக்க விரும்பினால், அதைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் நிதி தொடர்பான சிறந்த முடிவுகளை எடுக்க உதவும். பங்குசந்தை மற்றும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் தொழில்முறைகள் குறித்து அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். இப்படி தெரிந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு பணத்தை எதில் முதலீடு செய்யலாம் என்பது குறித்த ஐடியா கிடைக்கும். பிற்காலத்தில் நீங்கள் சொந்த தொழில் செய்யலாம் என முடிவு செய்தால், அதற்கும் இந்த அறிவு உதவும்.
4. அவசர நிதி:
அவசரகால வைப்பு நிதியை உருவாக்கி அதை உங்கள் செலவுக்காக வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். நிதிக் ஒரு அவசர நிதி. வழக்கமான முதலீட்டைத் தவிர, எதிர்பாராத சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவக்கூடியவை. அவசர நிதியை உருவாக்க உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்குங்கள். இப்படி செய்வதால் நீங்கள் சேமிக்கும் பணத்திலும் கை வைக்க வேண்டாம், உங்களுக்கு தேவையான நேரத்தில் கையிருப்பும் இருக்கும்.
5. பல வழிகளில் பண வரவு:
பணக்காரர் ஆவதற்கு ஒரு வழியில் மட்டும் வருமானம் வந்தால் போதாது, நீங்கள் அதிகம் சம்பாதிக்கக்கூடிய கூடுதல் வேலைகளை கண்டறிய முயற்சிக்கவும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது வழக்கமான வேலையைக்கு சென்றாலும் அதை தவிர்த்து ஃப்ரீலான்ஸ் செய்ய முயற்சிக்கவும். உங்கள் வேலை ஒரு புறம் இருந்தாலும் உங்களுக்கென்ற தனி கனவு என ஒன்று இருக்கும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு ஐடி ஊழியராக இருந்து உங்களுக்கு சமையல் கலையில் ஆர்வம் இருந்தால், சமயம் கிடைக்கும் நேரங்களில் அதற்கான வேலைகளில் இறங்கவும். ஒரு நாள் உங்கள் ஹாபியே ஒரு பெரும் சுய தொழிலாகவும் மாறலாம். இடைப்பட்ட நேரங்களில் நீங்கள் உங்கள் ஹாபியை வைத்து பணமும் சம்பாதிக்கலாம். அதற்கென்று தவறான செயல்களில் ஈடுபடுவடுது சட்டத்திற்கு எதிரான செயலாக மாறிவிடும்.
மேலும் படிக்க | விபத்தை தடுக்க ரயில்களில் கவாச் சிஸ்டம்... டெண்டர் வெளியிட ரயில்வே முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEat