Train Ticket booking: ரயில் டிக்கெட் புக் செய்த பிறகும் ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ளலாம்..! இதோ வழிமுறை
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகும்கூட, தேவைப்பட்டால் ஏறும் இடத்தை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கான வசதியை ஐஆர்சிடி வைத்துள்ளது.
நாள்தோறும் லட்சகணக்கான மக்கள் இந்தியா முழுவதும் ரயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பதிவு செய்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கின்றனர். இதுபோன்ற நெடுந்தொலைவு பயணங்களுக்கு மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கென் முன்பதிவு செய்துவிடுகின்றனர். அப்போது, இருக்கும் சூழலில் புறப்படும் இடத்தை கொடுப்பார்கள். ஆனால், சில சமயங்களில் சூழலுக்கு ஏற்ப புறப்படும் இடத்தில் ரயிலில் ஏற முடியாமல் போகலாம். உடனடியாக புறப்படும் இடத்தை மாற்ற வேண்டியிருக்கும்.
இது குறித்து ரயில்வேக்கு சென்ற கோரிக்கைகளின் அடிப்படையில் பரிசீலித்த ரயில்வே, புறப்படும் இடத்தை மாற்றிக் கொள்ளும் வசதியையும் கொடுத்துள்ளது. அதன்படி பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தாங்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆன்லைனில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. நீங்கள் ரயில் நிலையங்களுக்கு நேரடியாக சென்று அல்லது பயண முகவர்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் புறப்படும் இடத்தை மாற்ற முடியாது.
மேலும் படிக்க | சலுகை விலையில் பெட்ரோல்! IOC - Kotak மஹிந்திராவின் எரிபொருள் கிரெடிட் கார்டு!
IRCTC-ல் போர்டிங் பாயிண்டை மாற்றுவது எப்படி?
* உங்கள் IRCTC கணக்கில் உள்நுழையவும்
* எனது கணக்கு > எனது பரிவர்த்தனைகள் > முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு என்பதற்குச் செல்லவும்
* நீங்கள் மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, கீழே உள்ள 'போர்டிங் பாயிண்டை மாற்று' ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலை IRCTC காண்பிக்கும். மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* மாற்றத்தைச் செயல்படுத்த ‘சரி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
போர்டிங் பாயின்ட் மாற்றப்பட்டிருந்தால், வெற்றிகரமான எச்சரிக்கை வலதுபுறத்தில் தோன்றும். தொடர்புடைய செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கும் அனுப்பப்படும். இதற்கு தனியாக நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இந்த சேவை நீண்ட நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து வைக்கும் பயணிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. உங்களுக்கும் தேவைப்பட்டால் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புறப்படும் இடத்தை மாற்ற முடியாது என்ற அறியாமையில் இருந்துவிட வேண்டாம்.
மேலும் படிக்க | ரயில் முன்பதிவில் AI தொழில்நுட்பம்..! பயணிகளுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ