One Side Love Tips : காதலுக்கு வயதோ, நிறமோ, வசதியோ, தோற்றமோ எதுவுமே தடை கிடையாது. காதல் என்பது கண்டவுடன் வரலாம், காண காண வரலாம், ஏன், பார்காமலேயே கூட வரலாம். இதற்கென்று தனியான கட்டமைப்போ அல்லது வரைமுறையோ கிடையாது. பலர், நாம் விரும்பும் காதல் கைக்கு கிடைத்தால் மகிழ்ச்சி என நினைப்பர், ஒரு சிலர் நம்மவர் நம்மருகில் இல்லை என்றாலும், அவர் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று நினைப்பர். இதில், இரண்டாவது வகையாக யோசிப்பவர்கள் பெரும்பாலானாேர் ஒரு தலை காதலர்களாக இருப்பர். அப்படி, ஒரு தலையாக ஒருவர் மீது க்ரஷ் வைத்து சுற்றுவோருக்கு, அந்த காதலை முழுமையாக அடைய சில டிப்ஸ். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவான நண்பரை பிடியுங்கள்..


நீங்கள் அதிகமாக நேரம் செலவு செய்யும் இடத்தில் க்ரஷ் உருவாகி இருக்கலாம். அந்த நபருக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும், அவருக்கும் உங்களுக்கும் பொதுவான நண்பரை பிடியுங்கள். அவரிடம் உங்கள் க்ரஷை இன்ட்ரோ செய்து வைக்க கூறி கேட்க வேண்டும். அப்படி பொதுவான நண்பர் மூலம் உங்களை அறிமுகப்படுத்தி கொள்வது, உங்களை பரீட்சியமாக்க உதவும். 


அவருக்கு தனி மதிப்பு கொடுங்கள்..


உங்களுக்கு ஒருவர் மீது க்ரஷ் இருக்கிறது என்றாலே, அவருக்கு தனியாக அட்டென்ஷன் கொடுப்பீர்கள். ஆனால், ஒரு சிலர் தனக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், அவர்களை அப்படியே புறக்கணிப்பர். இதை செய்யக்கூடாது. நீங்கள் அவரிடம் பேசுவதிலேயே அவருக்கு உங்களது விருப்பம் குறித்து தெரிய வேண்டும். ஆனால், அதை அப்பட்டமாக காண்பிக்க கூடாது. 


வெளியில் கூப்பிடுங்கள்:


நீங்களும் அவரும் ஒரு இணக்கமான உறவை (நட்பு போல) ஆரம்பித்த பிறகு, அவர்களை தொல்லை செய்யாமல் பேசிக்கொண்டு மட்டும் இருங்கள். அதன் பிறகு, அவருக்கு பிடித்தவற்றை தெரிந்து கொண்டு, அவருடன் நீங்கள் நேரம் செலவு செய்ய நினைத்தால், ஒரு பொது இடத்தில் அவரை சந்திக்க அழையுங்கள். இதை ஆங்கிலத்தில் டேட்டிங் என்று கூறுவர். எதிரில் இருக்கும் நபருக்கு அது சம்மதம் என்றால் மட்டும் அவரை வெளியில் அழைக்கவும். இதற்கான நேரம் மற்றும் இடத்தை அவரை தேர்வு செய்ய சொல்லுங்கள். அவரால் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால், நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.


மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!


உண்மையை கூறுதல்:


எந்த ஒரு உறவும் உண்மையில் இருந்து தொடங்க வேண்டும். உங்கள் காதல் உறவும் அப்படிப்பட்ட உண்மையில் இருந்து தொடங்க வேண்டும். அதனால், உங்களுக்கு பிடித்த நபரிடம் அவரை பிடித்திருக்கிறது என்பதை கூறி விடுங்கள். நேரடியாக முகத்திற்கு நேராக கூறினாலும் சரி, கைப்பட எழுதிய கடிதமாக கொடுத்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் எதிரில் இருக்கும் நபரிடம் உங்களது விருப்பத்தை தெரிவித்து விடுங்கள். அப்போதுதான் அவருக்கு உங்கள் மனதில் இருப்பது என்ன என்பது தெரியும். 


பதிலை ஏற்றுக்கொள்ளுதல்..


உங்கள் க்ரஷ் எந்த பதில் தெரிவத்தாலும் அதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள பக்குவப்படுத்தி கொள்ளுங்கள். அவர் நோ சொன்னால் அவரை வற்புறுத்தாமல் அந்த பதிலை அப்படியே ஏற்க வேண்டும். நேரம் வேண்டும் என்று கேட்டால், ‘இந்த’ நாளுக்குள் சொல்ல வேண்டும் என்று விதிமுறை விதிக்காதீர்கள். “எப்போது வேண்டுமானாலும் சொல், உனக்காக நான் காத்திருப்பேன்” என்று கூறுங்கள். 


மேலும் படிக்க | சண்டை போட்ட நபரிடம் Sorry கேட்பது எப்படி? ஈகோ பாக்காம ‘இதை’ பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ