கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 'டிஜிலாக்கர்' என்கிற ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியது.  இதன்மூலம் டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு மற்றும் கல்விப் பிரதிகள் போன்ற பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் டிஜிட்டல் வெர்ஷன்களை பெற்றுக்கொள்ள முடியும்.  MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி, ஆதார் அட்டை அல்லது பான் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கரிலிருந்து சீக்கிரமாக பெற்றுக்கொள்ளலாம்.  ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன்மூலம் நீங்கள் விரைவாகவே இதிலிருந்து உங்களுக்கு வேண்டிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.  டிஜிலாக்கர் வெப்சைட் அல்லது ஆப் பற்றிய விவரம் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையெனில் இந்த வாட்ஸ் அப் சாட்போட் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.  இப்போது  MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலமாக முக்கியமான ஆவணங்களை எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!


1) உங்கள் மொபைல் காண்டாக்ட்டில் MyGov HelpDesk ஐ தொடர்புகொள்ள பயன்படும் +91-9013151515 என்ற எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


2) உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.


3) இப்போது MyGov HelpDesk சாட்போட்டை தேட வேண்டும்.


4) "நமஸ்தே" அல்லது "ஹலோ" என டைப் செய்து அந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.


5) இப்போது அந்த சாட்போட்டில் "Digilocker Services" அல்லது "CO-WIN Services" என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்குமாறு கேட்கும்.


6) உங்கள் மெனுவிலிருந்து டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும், இந்த சேவை இருந்தால் "ஆம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில், 'இல்லை' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


7) டிஜி லாக்கர் கணக்கு இல்லையென்றால், இப்போது அதை நீங்கள் உருவாக்க வேண்டும்.


8)  இப்போது உங்களின் 12 இலக்க ஆதார் எண் கேட்கப்படும், 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு மெனுவிலிருந்து "சென்ட்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


9) இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். 


10) இப்போது டிஜிலாக்கர் கணக்குடன் தொடர்புடைய ஆவணங்களின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம்.


11) டவுன்லோடு செய்ய உங்களுக்கு தேவையான ஆவணத்தின் எண்ணை உள்ளிட வேண்டும். 


12) இப்போது உங்கள் சாட்பாக்சில் உங்களுக்கு தேவையான பிடிஎஃப்  அனுப்பப்படும்.


மேலும் படிக்க |  இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ