இந்திய ரயில்வேயின் முக்கிய விதி: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதற்காக டிக்கெட் புக் செய்ய மக்கள் ரயில் நிலையங்களின் கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதை விட ஆன்லைனில் IRCTC செயலி மூலமோ அல்லது வேறு ரயில் டிக்கெட் முன்பதிவு செயலி மூலமோ டிக்கெட் எடுப்பது தற்போதைய சூழலில் எளிதாகிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, காலி இருக்கைகள் குறித்த தகவல்களை பெற பயணிகள், ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தேடி ஓட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது, ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை நீங்கள் வீட்டில் இருந்தப் படியே உங்களது மொபைல் போன் மூலமே எளிதாக பெறலாம். இதற்கு நீங்கள் IRCTC செயலிலோ அல்லது இணையதளத்திலோ லாகின் செய்ய தேவையில்லை. சாதரணமாக அதன் இணைப்பைக் கிளிக் செய்தாலே போதும், ரயிலில் எந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்பதை நீங்கள் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.


மேலும் படிக்க | Indian Railway: இந்திய ரயில்வேயின் புதிய விதிகள்! இனி இவர்களுக்கு மட்டும் தான் லோயர் பெர்த்


காலி இருக்கையை எப்படி அறிந்துக்கொள்வது?


* முதலில் IRCTC இணையதளத்திற்குச் https://www.irctc.co.in/nget/train-search சென்று முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும். பின்னர் டிக்கெட் முன்பதிவு பெட்டியின் மேலே "Charts/காலியிடங்கள்" ஆப்ஷன் தோன்றும்.
* Charts/காலியிடங்கள் என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு, Reservation Chart பக்கம் திறக்கும்.
* முதல் பெட்டியில் ரயிலின் பெயர்/எண்ணையும், இரண்டாவது பெட்டியில நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கும் ரயில் நிலையத்தையும் உள்ளிடவும்.
* இதன் பிறகு "Get Train Chart" என்பதைக் கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்கள் செல்ல விரும்பும் ரயிலில் காலி இடங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள்.


மொபைல் போனில் எவ்வாறு கண்டறிவது?
மொபைல் போனில் அதிகாரப்பூர்வ IRCTC செயலியையும் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது. நீங்கள் அதை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். பின்னர் நீங்கள் கிடைக்கக்கூடிய காலி இருக்கைகளை எளிதாக பதிவு செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 படிகளைப் பார்ப்பதன் மூலம், காலியான இருக்கையை எவ்வாறு பார்ப்பது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 


* IRCTC செயலியைத் திறக்கவும்.
* ரயில் ஐகானைத் தட்டவும்.
* Chart Vacancy ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு, மொபைல் இணைய உலாவியில் முன்பதிவு விளக்கப்படப் பக்கம் திறக்கும்.
* இப்போது இரண்டாவது பெட்டியில் ரயிலின் பெயர்/எண் மற்றும் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கும் ரயில் நிலையத்தையும் உள்ளிடவும். அதன் பிறகு, காலியான இருக்கைகள் பற்றிய தகவல்கள் திரையில் காட்டப்படும்.


ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை:
-IRCTCன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
-உங்கள் கணக்கில் உள்நுழையவும் / பதிவு செய்யவும்.
-அதன் பிறகு உங்கள் பயண விவரங்கள்/தகவல்களை நிரப்பவும்.
-ரயிலைத் தேர்ந்தெடுக்கவும்.
-Book Now விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
-பயணிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
-கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த செயல்முறையை முடித்த பிறகு உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.


மேலும் படிக்க | Happy Republic Day 2024, Republic Day 2024: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ