எந்த உறவாக இருந்தாலும் அதில் நம்பிக்கையும், அன்பும் இருந்தால்தான் அது நீண்ட காலம் நீடிக்கும் எனக்கூறப்படுகிறது. அது மட்டுமன்றி தனது பார்ட்னரை மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும் காதல் உறவோ அல்லது திருமண உறவோ நீண்ட காலம் நீடிக்கும் என கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகிழ்ச்சியற்ற உறவிற்கான அறிகுறிகள்:


உங்கள் உறவை வலுப்படுத்தவும், அந்த உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கவும் கணவன்-மனைவி என இருவருமே அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். திருமண உறவில் நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும். திருமண உறவில் நபிக்கையும் அன்பும் இருந்தால் அந்த உறவு அதிக காலம் நீடிக்கும் என திருமணமானவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மன நல நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சிலர், அந்த திருமண உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், மகிழ்ச்சியாக இருப்பது போல நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த உறவில் கண்களுக்கே தெரியாமல் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. உங்களது பார்ட்னரிடம் ஏற்பட்டிருக்கும் சிறிய மாற்றங்களும் பார்ட்னரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல, உடல் அளவிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 


பிடித்தம் குறையும்..


மகிழ்ச்சியற்ற உறவில் இருந்தால், இருவருக்குள்ளும் வேறுபாடுகள் எழும். இதனால், இருவருக்குள்ளும் இருக்கும் பிடித்தம் குறைந்து ஒரு கட்டத்தில் பேச்சுகள் குறைய ஆரம்பித்து விடும். சில சமயங்களில் உறவு உடைந்து போனது போலவும் தோன்றும். சில சமயங்களில் உங்களது பார்ட்னர் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பது உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும். 


மேலும் படிக்க | கடனில் இருந்து மீண்டும் கோடீஸ்வரராவது எப்படி? சூப்பரான 8 டிப்ஸ்


தூரமாகிவிடுவீர்கள்..


எல்லா உறவிலும் உணர்ச்சிகள் அனைத்தும் மிகவும் முக்கியம். ஆனால், உங்களது பார்ட்னரிடம் இருந்து உணர்ச்சி ரீதியாக நீங்கள் தொலைவில் இருப்பது போல உணர்வீர்கள். இப்படியான உணர்வு இருந்தால், அது மகிழ்ச்சியான உறவு இல்லை என்ற அர்த்தமாகும். இப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தால் கண்டிப்பாக உங்கள் துணையுடன் நீங்கள் மனம் விட்டு பேசுவது அதை நிவர்த்தி செய்ய உதவும். 


பழக்க வழக்கங்கள் மாறும்:


நீங்கள் திருமண உறவில் இருக்கும் போது ஏதேனும் ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்து இருப்பீர்கள். அப்போது உங்களின் பார்ட்னரிடம் இருந்து உங்களுக்கு பிடித்த பழக்க வழக்கங்கள் மாற்றமடையும். ஒரு கட்டத்தில் அது உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், அதை மாற்றுவதற்கு நிறைய பேச ஆரம்பியுங்கள். 


எரிச்சல் உணர்வு:


நீங்கள், மகிழ்ச்சியில்லாத திருமண உறவில் இருந்தால் உங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவருக்கு எரிச்சலூட்டும். எந்த விஷயம் குறித்து பேசினாலும் அதில் உங்களுக்குள் சண்டை எழும், வீண் விவாதங்கள் வளரும். உங்கள் மீது தவறே இல்லை என்றாலும், உங்கள் நிலையை அவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். எனவே, கண்டிப்பாக அவருக்கு உங்களிடம் திருத்திக்கொள்ள வேண்டிய ஏதேனும் விஷயங்கள் இருந்தால் அதை திருத்திக்கொள்வேன் என்று கூறுங்கள். 


மேலும் படிக்க | Bank Holiday: ராமர் கோயில் திறப்பு: வங்கிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ