இன்றைய காலகட்டத்தில் தொழில் முனைவோர் முதல் தொழிலாளர்கள் ஆகிய அனைவருக்கும் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.  ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரைப் பார்த்து அந்த நபரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தீர்மானிக்கலாம்.  பல்வேறு கிரெடிட் பீரோக்கள் உங்கள் பதிவுகளை மதிப்பிட்டு உங்களுக்கு ஸ்கோரை அனுப்புகிறது.  இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனம், சிபில் (கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ லிமிடெட்) 2000ம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிரான்ஸ்யூனியன் உடன்  இணைக்கப்பட்டுள்ளது.  வங்கியில் நீங்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது கடன் வழங்குபவர் முதலில் பார்ப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை தான்.  கிரெடிட் கார்டு கடன் அல்லது அடமானத்திற்கு விண்ணப்பித்தாலும் இதே நடைமுறையை தான் பின்பற்ற வேண்டும்.  இதுபோன்ற கிரெடிட் ஸ்கோர்கள் கடனளிப்பவருக்கு உங்கள் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் 



கடனை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களது சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும், உங்கள் சிபில் ஸ்கோர் குறைவான அளவில் இருந்தால் கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படும்.  அதிக கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது, மானியங்களுக்கு அனுமதிக்கப்படுவதை எளிதாக்கும்.  நீங்கள் ஏதேனும் கடன்களை வாங்கியிருக்கும் படசத்தில் அதனை மாதாந்திர தவணைகளில் திருப்பி செலுத்தும்போது சரியான நேரத்தில் செலுத்தாமல் தவறிவிட்டால் உங்களது கிரெடிட் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும்.  சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் உங்களது அனைத்து இஎம்ஐ-களும் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதையும், நீண்ட காலத்திற்கு நிலுவையில் உள்ள தொகைகள் எதுவும் இல்லை என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.


முழு கிரெடிட் கார்டு வரம்பைப் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறது, கடன் பயன்பாட்டு விகிதம் (சியூஆர்) சிபில் ஸ்கோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கிரெடிட் கார்டை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, சிபில் ஸ்கோரின் நிலை இருக்கிறது.  ஒருவரது கிரெடிட் ஸ்கோர், அவரிடம் வேறு ஏதேனும் கடன்கள் நிலுவையில் உள்ளதா என்பதையும், முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தும் போது அந்த நபர் ஏதேனும் தவறு செய்துள்ளார் என்பதையும் காட்டுகிறது.  பொதுவாக ஒருவரது சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் அவருக்கு கடன் வழங்குவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.


மேலும் படிக்க | 8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ