பலருக்கு ஒரு வயதை கடந்து விட்டாலோ, அல்லது திடீரென்றோ, படுக்கையறை வாழ்க்கையில் விருப்பம் இல்லாதது போல தோன்றும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்னென்ன என்பதையும் இதை எப்படி களையலாம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படுக்கையறை வாழ்க்கையில் விருப்பம் இல்லாம் போவது..


உடலுறவில் விருப்பம் இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது போன்ற உணர்வுகள் வயது வரம்பின்றி தோன்றும். ஒருவர், இருவருக்கு அல்ல, பலர் இதனால் அவதிப்படுகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?


>உங்களது பார்ட்னருக்கு உடலுறவில் விருப்பம் இல்லாமல் இருத்தல்.


>உங்கள் துணையாலோ அல்லது உங்களாலோ உடலுறவு கொள்ள முடியாத நிலை ஏற்படுதல். (பாலியல் சார்ந்த அல்லது சாராத உடல் கோளாறுகள்)


>ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து போவது. 


>மன அழுத்தம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சனைகள். 


>உங்கள் துணையிடம் இருக்கும் இணக்கம் அல்லது காதல் குறைந்து போதல். 


உடலுறவில் ஆர்வம் குறைந்து பாேவதற்கு மேற்கூறியவை போல பல காரணங்கள் உள்ளன. 


1.உங்கள் உடலுறவைத் தொடங்கும் முறையை மாற்றவும்:


உடலுறவு ஆரம்பித்தவுடன் நடந்து விடாது. தொடுதல், பேசுதல் போன்ற ஏதாவது ஒன்றில் இருந்துதான் உடலுறவு தொடங்கும். இது உங்களுக்கு சலித்து போய் இருப்பதால் உடலுறவில் நாட்டம் குறைந்து காணப்படலாம். எனவே, நீங்கள் உடலுறவு தொடங்கும் முறையை மாற்றலாம். உதாரணத்திற்கு படுக்கையறைக்கு சென்ற பின்தான் அனைத்தையும் தொடங்க வேண்டும் என்பது இல்லை. உங்களுக்கு எந்த இடம் வசதியாக உள்ளதோ அந்த இடத்தில் இருந்தே தொடங்கலாம். மேலும், படுக்கையறைக்கு செல்லும் முன்பு தொட்டுக்கொள்வது, பேசுவது, ஒருவரை ஒருவர் உடல் அளவில் பாராட்டிக்கொள்வது போன்றவற்றை பின்பற்றலாம். 


மேலும் படிக்க | படுக்கையறை டிப்ஸ்: தாம்பத்ய சுகத்தை அதிகரிக்க ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்..!


2.கை கோர்த்துக்கொள்ளுங்கள்:


உடல் அளவில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்வது கண்டிப்பாக உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். கை கோர்த்துக்கொள்வது காதல் மொழியில் ஒன்றாகும். இதை பொது வெளியிலும் செய்யலாம், படுக்கையறையிலும் செய்யலாம். உடலுறவு கொள்ளும் போது கைக்கோர்த்துக்கொள்வது காதலுடன் சேர்ந்த பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும். அதனால் அதிகமாக கை கோர்க்க பழகுங்கள். 


3.காத்திருக்க வைக்கலாம்..


படுக்கையறை வாழ்க்கைக்கு சிலிர்ப்புகளும் தவிப்புகளும் அவசியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டால் அதன் அருமை பலருக்கு தெரியாது. அதனால், பாலியல் சிலிர்ப்பையும் தவிப்பையும் இருவருக்குள்ளும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முன் விளையாட்டுகள், உடலுறவு குறித்த கற்பனைகள் போன்றவை இதற்கு உதவும். இது, காமம் மட்டுமன்றி காதலையும் அதிகரிக்குமாம். 


4.கவனம் செலுத்துதல்..


பரீட்சையறையில் மட்டுமல்ல, படுக்கையறையிலும் கண்டிப்பாக கவனச்சிதறல் இருக்க கூடாது. உறவில் உள்ள விரிசல் குறித்தோ அல்லது வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்தோ கண்டிப்பாக படுக்கையறையில் பேசக்கூடாது. இவ்வாறான பேச்சுக்களால் கவனம் சிதறக்கூடும். படுக்கையறையில் இன்பம் குறைந்து போகும், இதை தவிர்க்க, அனைத்தையும் முடிந்த பிறகு, படுத்துக்கொண்டு கைகள் கோர்த்துக்கொண்டு பேசலாம். 


5.மருத்துவரை அணுகுதல்..


என்ன செய்தும் பலனில்லை எனும் படசத்தில் மருத்துவரை அணுகுவது சிறந்த பலனை அளிக்கும். அவர்கள் வழங்கும் ஆலோசனைகளும் மருந்துகளும் கண்டிப்பாக படுக்கையறை வாழ்க்கை சிறக்க உதவும். 


மேலும் படிக்க | உடலுறவுக்கு முன் கண்டிப்பாக செய்ய வேண்டிய ‘அந்த’ 7 விஷயங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ