பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி: பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகமாக நிறைந்துள்ளது, இந்த சத்துக்கள் பொதுவாக மஞ்சள் நிற பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் வைட்டமின் ஏவாக மாறுகிறது. அதுமட்டுமின்றி இது 1094 IU ஐ கொண்டிருக்கிறது. இதனுடன் உடல் நலத்துக்கு முக்கியமான வை ட்டமின் சி யும் இந்த பழத்தில் நிறைந்துள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும். எனவே பப்பாளியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை தருவதற்கு உதவுகிறது, அதுமட்டுமின்றி இதனால் முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனையிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது தவிர, வயதான எதிர்ப்பு பண்புகளை தடுக்கும் பண்புகளும் இதில் உள்ளன. இந்நிலையில் பல சத்துக்களை கொண்ட பப்பாளி ஃபேஸ் பேக் செயல்முறையை பற்றி இன்று காணப் போகிறோம். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் எவ்வாறு மாறும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்-


  • 2 டீஸ்பூன் பப்பாளி கூழ்

  • 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு

  • அரை தேக்கரண்டி தேன்


பப்பாளி ஃபேஸ் பேக் செய்வது எப்படி? - How to make papaya face pack :
பப்பாளி ஃபேஸ் பேக் செய்ய, முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் பப்பாளி கூழ், வெள்ளரி சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
அதன் பிறகு, இவை அனைத்தையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இப்போது உங்கள் பப்பாளி ஃபேஸ் பேக் தயார்.


மேலும் படிக்க | Weight Loss: உடல் பருமனால் கவலையா? பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ஓவர் வெயிட்டுடன் கவலையும் போய்விடும்


பப்பாளி ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்துவது? - How to apply papaya face pack :
பப்பாளி ஃபேஸ் பேக் போடும் முன் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
பின்னர் தயாரிக்கப்பட்ட பேக்கை உங்கள் கைகளால் முகம் மற்றும் கழுது முழுவதும் தடவவும்.
அதன் பிறகு, இந்த பேக்கை முகத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் தடவி உலர வைக்கவும்.
பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.
சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு 3 முதல் 4 முறையாவது இந்த பேக்கைப் பயன்படுத்தவும். 
பப்பளியை முகத்தில் இப்படியும் பயன்படுத்தலாம்


பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும்.


(பொறுப்பு துறப்பு : அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | weight loss: சிக்குனு எடை, சின்னதா தொடை, இஞ்சி இடுப்பு, வயிற்றில் நோ மடிப்பு: இந்தாங்க டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ