நம்மில் பலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது, டயட் இருப்பது போன்ற பல செயல்பாடுகளில் ஈடுபடுவோம். ஆனாலும், உடல் எடை குறைப்பிற்கான ரிசல்ட் சற்று தாமதமாகவே கிடைக்கும். உடல் பருமனுடன் இருப்போர் பலர் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று நினைப்பர். இது, நம் வாழ்வில் ஏற்படுத்தும் சில மாற்றங்களால் சாத்தியமாகும், ஆனால் அதுவே அனைவருக்கும் நடக்கும் என்று கூற முடியாது. இதற்கு என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடற்பயிற்சி மற்றும் டயட்:


உடல் எடையை குறைக்க முக்கியமான விஷயங்களாக கருதப்படுவது உடற்பயிற்சி மற்றும் டயட். இவையன்றி உடல் எடையை குறைப்பது கடினம். டயட் மட்டும்  இருந்தாலும், உடற்பயிற்சி மட்டும் செய்தாலும் ரிசல்ட் அவ்வளவு எளிதில் தெரிய வராது. உடற்பயிற்சி மற்றும் டயட் உடன் சேர்த்து பின்வரும் நடவடிக்கைகளையும் கடைபிடித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் உடல் எடை வேகமாக குறையும். 


கலோரி கவுண்ட்:


நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கலோரி கவுண்டர் (Calorie Counter) மூலம் எண்ணிக்கொள்ள வேண்டும். நாம் உடலுக்கு உடல் எடை குறைப்பிற்கும் ஏற்ற சத்தான உணவுகளைதான் எடுத்துக்கொள்கிறோமா என்று சரிபார்த்துக்கொள்ள இந்த கலோரி கவுண்டர் உதவி புரியும். இதனால், நாம் எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் எதை எதை தவிர்க்கலாம் என்று நல்ல யோசனை கிடைக்கும். இது குறித்து நடைப்பெற்ற ஒரு ஆராய்ச்சியில் தான் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்கிறோம் என்று எண்ணுபவர்களை விட, அதை கணக்கில் வைத்திருப்பவர்கள் உடல் எடையை நன்றாகவே குறைப்பதாக தெரியவந்துள்ளது. 


நீர்சத்து:


நம் உடல் 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தண்ணீரில் உடல் எடையை கூட்டும் அளவிற்கு எந்த சத்தும் இல்லை. அதனால், உடலுக்கு ஏற்ற அளவிற்கு தினம் தினம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தாகமும் பசியும் தவறாக புரிந்துகொள்ள படும். அந்த நேரத்தில் சாப்பிட்டால் நாம் எப்போதும் எடுத்துக்கொள்வதை விட அதிகளவில் உணவினை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். அதனால் உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருத்தல் வேண்டும். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிடுவது, நாம் எப்போதும் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைக்கும். இதனால்தான் தினமு 1.5 லிட்டரில் இருந்து 2 லிட்டர் தண்ணீர் வரை நாம் தினமும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | உடல் எடை உடனே குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க: ஆச்சரியப்படுவீங்க!!


பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்:


பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடல் எடையை அதிரடியாக ஏற்றக்கூடும். ஆதலால், உடல் எடையை உடனடியாக குறைக்க விரும்புவோர், கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். 


பொறுமையாக சாப்பிட வேண்டும்..


நம்மில் பலர் வேகமாக சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுகையில் சரியாக மெல்லாமல் அப்படியே மென்று விடுவோம். இதுவும் உடல் எடை ஏற ஒரு காரணம். ஆதலால், உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாப்பிடுகையில் வேகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நாம் முழுமையாக சாப்பிட்டது போன்ற உணர்வு வந்துவிடும். மெதுவாக சாப்பிடுவதால் நமது வயிறு பாதியாக நிரம்பியிருந்தாலும் மேற்கொண்டு பசிக்காது. 


நல்ல தூக்கம்:


உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு அவசியமான ஒன்று, நல்ல தூக்கம். தூக்கத்திற்கான ஹார்மோன்கள்தான் நமது செரிமானத்திற்கு உதவும். தூக்கம் குறைவாக இருப்போர் அதிகளவில் சாப்பிடுவதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க தினமும் 7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க இந்த 5 சிறந்த உணவை உண்ணுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ