கல்வி ஒன்று மட்டுமே அழிக்க முடியாத செல்வம். மற்றவை எல்லாம் உங்களைவிட்டு போனாலும் கல்வி ஒன்று இருந்தால் அது உங்களை காப்பாற்றிவிடும். இருப்பினும் கல்விச் சூழலில் தவிர்க்க முடியாதவையாக போட்டித் தேர்வுகள் இருக்கின்றன. இவற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே கவுரவமான பதவிகளில் வேலை செய்ய முடியும். அப்படியான போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் படித்தவற்றையெல்லாம் எப்போதும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதனால், படித்தவையெல்லாம் மறக்காமல் இருக்க சில அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். 

 

புரிந்து படித்தல்

 

எப்போது படித்தாலும் புரிந்து படிக்க வேண்டும். நாள் முழுவதும் படிப்பது முக்கியமில்லை. எவ்வளவு படித்தாலும் அதனை புரிந்து மனதில் பதியுமாறு படிப்பதே முக்கியம். அதனால், படிப்பவற்றை நிதானமாகவும், பொறுமையாகவும் படிக்கவும். முக்கியமான விஷயங்களை வாழ்வியல் விஷயங்களோடு ஒப்பிட்டு படிக்க கற்றுக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு எளிதில் எந்த விஷயத்தையும் ஞாபக்கப்படுத்திவிடும். 

 


 

நண்பர்களுக்கு கற்றுக் கொடுத்தல்

 

படித்த விஷயங்களை நண்பர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் எப்படி படித்தீர்களோ அப்படியே பிறருக்கு படிக்கக் கற்றுக் கொடுக்கவும். எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் படிக்க கற்றுக் கொடுக்கவும். 

 

திரும்ப திரும்ப படிக்கவும்

 

எந்தவொரு பாடத்தையும் திரும்ப திரும்ப படிக்கவும். கடினமான விஷயங்களை எளிமைபடுத்தி புரிந்து கொள்ள முயற்சிக்கவும். சிம்பிளாக மாற்றிக் கொண்டீர்கள் என்றால் படித்தவை எல்லாம் அப்படியே மனதில் பதிந்துவிடும். 

 

தேர்வு எழுதுதல்

 

நீங்கள் படிக்கும் விஷயத்தை அடிக்கடி தேர்வு எழுதிபடிக்கவும். தேர்வு எழுதுவது மட்டுமே பாடத்தில் உங்களை மேலும் சிறப்பாக மாற்றும். நேர்மறை கேள்விகள், எதிர்மறை கேள்விகள், ஒப்பீடு கேள்விகள் என ஒரு விடைக்கு பல கேள்விகளை நீங்களே வடிவமைத்து விடையை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இது தேர்வில் தவறான பதில்களை நீக்க உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | சுகர் இருந்தா சரக்கு அடிக்கலாமா கூடாதா...? ஆய்வறிக்கை சொல்லும் உண்மை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ