Paytm போஸ்ட்பெய்ட் வட்டியில்லா கிரெடிட் வசதியின் கீழ், நீங்கள் ஏதேனும் பொருட்களையோ அல்லது சேவையையோ வாங்கி, சில நாட்களுக்குப் பிறகு திருப்பிச் செலுத்தலாம். பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்கின்றனர். ஷாப்பிங் தவிர, புறக்கணிக்க முடியாத சில வேலைகளும் உள்ளன. உதாரணமாக, வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்துதல் அல்லது ரீச்சார்ஜ் மற்றும் கரண்ட் பில்களை செலுத்துதல் ஆகியவை இருக்கின்றன. இவை அனைத்தும் மக்களின் அன்றாட பட்ஜெட்டை பாதிக்கிறது. இதில் நீங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் Paytm போஸ்ட்பெய்ட் கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வட்டியில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான Paytm-ன் பை நவ் பே லேட்டர் (BNPL) வசதியின் பெயர் Paytm போஸ்ட்பெய்டு. இந்த சேவையின் கீழ், Paytm வாடிக்கையாளரின் போஸ்ட்பெய்டு கணக்கில் கடன் வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரம்பு பயனரின் கடன் வரலாற்றைப் பொறுத்தது. இந்த வரம்பு மூலம், Paytm பயன்பாட்டில் ரீசார்ஜ், பில் செலுத்துதல் அல்லது ஷாப்பிங் போன்றவற்றைச் செய்யலாம். பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிகர்கள் Paytm போஸ்ட்பெய்ட் மூலமாகவும் பணம் செலுத்தலாம். சிறப்பு என்னவென்றால் Paytm போஸ்ட்பெய்டைப் பயன்படுத்துபவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மளிகைக் கடைகளிலும் இதன் மூலம் ஷாப்பிங் செய்யலாம்.


மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் 


பில் எப்போது செலுத்த வேண்டும்?


Paytm போஸ்ட்பெய்ட் பில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி உருவாக்கப்படுகிறது. பில் செலுத்துவதற்கான காலக்கெடு ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதியாகும். உங்கள் Paytm போஸ்ட்பெய்டு பரிவர்த்தனைகளை EMI-களாக மாற்றலாம்.


Paytm போஸ்ட்பெய்டை எவ்வாறு செயல்படுத்துவது?


நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி Paytm போஸ்ட்பெய்ட் சேவையை செயல்படுத்தலாம்.


* Paytm கணக்கில் உள்நுழைந்து, தேடல் ஐகானில் Paytm Postpaid என தட்டச்சு செய்யவும்.
* இதற்குப் பிறகு Paytm Postpaid ஐகானைக் கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு முழு KYC அப்டேட் செய்ய வேண்டும். KYC-ன் முழு செயல்முறையும் டிஜிட்டல் வழியாக ஆன்லைனில் செய்யலாம்.
* KYC செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் Paytm போஸ்ட்பெய்ட் சேவை செயல்படுத்தப்படும்.


மேலும் படிக்க | 8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ