Hotel Room Rent Discount: பல நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வேறு இடத்திற்குச் சுற்றுலா செல்வது வாடிக்கையானது தான். அங்கு பல நாள்கள் செலவழிக்க விரும்பும் அவர்கள், தங்குவதற்கு ஒரு ஹோட்டலை தேடுவார்கள். சுற்றுலா தளங்களில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இடம், தரம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து ஹோட்டல் கட்டணம் மாறுபடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், வாடகை எவ்வளவு பெரிய அறையை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் அமையும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மறுபுறம், நீங்கள் எப்போது சுற்றுலா சென்றாலும், ஹோட்டல் வாடகை முக்கியமான செலவுகளில் ஒன்றாக இருக்கும். பல சமயங்களில் ஹோட்டல் வாடகையும் மக்களின் பட்ஜெட்டை பதம்பார்த்துவிடும். இந்நிலையில், தற்போது மாநில அரசு தரப்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி ஹோட்டல் வாடகையில் விலக்கு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


வாடகை தள்ளுபடி


இமாச்சலப் பிரதேச அரசால், சுற்றுலாப் பயணிகளுக்கு இப்போது ஹோட்டல் வாடகையில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (HPTDC) ஹோட்டல் அறை வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 70 ஆயிரத்திற்கும்ம் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மாநில அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியதை நினைவில் கொள்ளவேண்டும். 


மேலும் படிக்க | Government Scheme: ரூ.2000 தரும் மத்திய அரசு! விண்ணப்பிப்பது எப்படி?


நிலச்சரிவு மற்றும் வெள்ளம்


இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சுற்றுலாப் பயணிகள் நிவாரணம் பெறும் வகையில், அவர்களுக்கு ஹோட்டல் வாடகையில் சலுகை அளிக்க அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அரசின் இந்த முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர். HPTDC-யால் நடத்தப்படும் ஹோட்டல்களில் இந்த விலக்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தள்ளுபடியை வழங்குவதன் மூலம், HPTDC சுற்றுலா பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த முயற்சித்து, அவர்களை ஈர்க்கின்றது.


சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு


உண்மையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் மழையால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா தொழில் பங்குதாரர்கள் சங்கத் தலைவர் எம்.கே.சேத் இதுகுறித்து கூறியதாவது, ஜூலை 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பெய்த கனமழைக்குப் பிறகு, மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. நிலைமை வேகமாக முன்னேறி, சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்றார்.


மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு ஷாக் செய்தி, முக்கிய விதிகளை மாற்றியது இந்த வங்கி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ