LIC Jeevan Labh Policy: எல்ஐசி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் அனைத்து வயதினருக்கும் ஒரு பாலிசி உள்ளது. அதில் ஒன்றுதான், எல்ஐசி ஜீவன் லாப் பாலிசி ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்ஐசி ஜீவன் லாப் பாலிசி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு நன்மைகளையும் ஒருங்கே வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பின்னர், முதிர்வு நேரத்தில் மொத்தத் தொகையைப் பெறுவீர்கள். இந்த பாலிசி திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 7 ஆயிரத்து 572 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும். இதன்பின், உங்கள் எதிர்காலத்தில் 54 லட்சம் ரூபாயை நீங்கள் இதில் பெறுவீர்கள். இது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் மற்றும் இணைக்கப்படாத திட்டமாகும். zeenews.india.com/tamil/business-news/hurry-up-senior-citizen-this-best-lic-pension-policy-will-end-at-march-31-2023-437125


பாலிசிதாரர் இறந்தால் குடும்பத்திற்கு இது நிதி உதவி வழங்குகிறது. இதனுடன், பாலிசிதாரர் முதிர்வு வரை உயிருடன் இருக்கும்பட்சத்தில், அவருக்கு பெரியளவில் பணம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பப்படி பிரீமியத்தின் அளவு மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. எல்ஐசி ஜீவன் லேப் திட்டம் குறித்து முழமையாக இதில் தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்


எல்ஐசி ஜீவன் லேப் பாலிசி


உதாரணத்திற்கு, ஒருவர் ஜீவன் லாப் பாலிசியை 25 வயதில் எடுத்தால், அவர் மாதம் ரூ.7,572 அல்லது ஒரு நாளைக்கு ரூ.252 முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த திட்டத்தில், ஆண்டுக்கு ரூ.90,867 டெபாசிட் செய்யப்படும். அவர் சுமார் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வார். முதிர்வு முடிந்ததும், பாலிசிதாரர் ரூ.54 லட்சம் தொகையைப் பெறுவார். நீங்கள் எல்ஐசியின் லைஃப் பெனிபிட்டில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரிவர்ஷனரி போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் வழங்கப்படும்.


எல்ஐசி ஜீவன் லாப் பாலிசியின் சிறப்பு, 8 வயது முதல் 59 வயது வரை உள்ள எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்த பாலிசியின் கீழ், காப்பீடுதாரர்கள் 10, 13 மற்றும் 16 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம், இது 16 முதல் 25 ஆண்டுகள் முதிர்ச்சியில் பணம் வழங்கப்படும். 59 வயதுடைய ஒருவர் 16 ஆண்டுகளுக்கு ஒரு காப்பீட்டு பாலிசியை தேர்வு செய்யலாம், அதனால் அவரது வயது 75 வயதுக்கு மிகாமல் இருக்கும்.


பாலிசியின் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் என்னவென்றால், பாலிசியின் காலப்பகுதியில் பாலிசிதாரர் ஏதேனும் காரணத்தால் இறந்தால், அதன் பலனை அவரின் வாரிசு (Nominee) பெறுவார். போனஸ் உடன், காப்பீட்டு நிறுவனம் நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையின் பலனையும் வழங்குகிறது. இந்த பாலிசியின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக உயிரிப்பிற்கு பின்னான பலன் கருதப்படுகிறது. இதில், பாலிசி உடைக்கப்படாமல், அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டிருந்தால், பாலிசிதாரரின் இறப்புக்குப் பிறகு காப்பீட்டுத் தொகை திரும்பப் பெறப்படுகிறது.


மேலும் படிக்க | LIC பாலிசிதாரர்களுக்கு எச்சரிக்கை: மார்ச் 31ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ