10ஆம் வகுப்பு பாஸ் ஆகியிருந்தாலே அரசு வேலை... மாதம் ரூ. 81 ஆயிரம் வரை சம்பளம் - முழு தகவல் இதோ!
BSF Recruitment 2023: 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற் மாணவர்கள் தாங்கள் அடுத்த எந்த துறையில் சேரலாம், எந்த கல்லூரிகளில் சேரலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
BSF Recruitment 2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மேலும், 11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், பல்வேறு மாணவர்கள் தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த கல்லூரியில் எந்த பாடங்களில் சேரலாம் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் இருப்பார்கள்.
அந்த வகையில், 10ஆம் வகுப்பு படித்து ஐடிஐ படித்தவர்களுக்கும், 12ஆம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. உயர்கல்வி படிக்கும் முன்பே, வேலைவாய்ப்பு அமைவது கூடுதல் நன்மை என்பதால் பலரும் இதை நாடிச்செல்கின்றனர். இதுகுறித்த முழு விவரங்களை இதில் காணலாம்.
கால அவகாசம் நீட்டிப்பு
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) தலைமை காவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. விண்ணப்பத்தின் கடைசி தேதி முடிவடைய இருந்தபோது, BSF அதனை நீட்டிக்க முடிவு செய்தது. இப்போது இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணபிப்பது
இந்த காலியிடங்கள் BSFன் தகவல் தொடர்பு பிரிவுக்கானது. இதில் சேர விரும்புபவர்கள், அதன் ஆட்சேர்ப்பு இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் ஆண் மற்றும் பெண் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வரும் மே 21ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள்
BSF தலைமை கான்ஸ்டபிள் மொத்தம் 247 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது. இதில் 217 பணியிடங்கள் ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்) மற்றும் 30 பணியிடங்கள் ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ மெக்கானிக்) பணிக்கானது.
வயது வரம்பு
இது நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு, இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள்
பிசிஎம் பாடங்களில் முதல் பிரிவுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12வது தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அவர்கள் இரண்டு வருட ஐடிஐ தேர்ச்சி சான்றிதழுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
ஹெட் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது, EWS மற்றும் OBC பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதனுடன், 47 ரூபாய் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். அதேசமயம், SC, ST பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் BSF பணியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
சம்பளம்
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உங்கள் ஆதார் மூலம் எத்தனை சிம் கார்ட் வாங்கப்பட்டுள்ளது? கண்டுபிடிக்க வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ