கொரோனா வைரஸிற்கு பயந்து மனைவியை கணவன் டாய்லெட்டில் அடைத்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரானா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ள நிலையில், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத் ஆகிய 3 நகரங்களில் கொரானாவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாகி உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸிற்கு பயந்து மனைவியை கணவன் டாய்லெட்டில் அடைத்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 


ஐரோப்பா மாநிலம் லிதுவானியாவில் உள்ள பெண் ஒருவர் இத்தாலியிலிருந்து வந்த சீனப்பெண் ஒருவரைச் சந்தித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் தன் கணவரிடம் அவரை சந்தித்தது குறித்துக் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் டாக்டரை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவர் அவரது மனைவியைத் தனிமைப்படுத்தச் சொல்லியுள்ளார். அதைக் கேட்டதும் அவர் தனது மனைவியை வீட்டின் டாய்லெட்டிற்குள் அனுப்பி டாய்லெட்டை அடைத்துவிட்டார், மனைவி எவ்வளவோ தட்டியும் திறக்கவில்லை.


இதையடுத்து, மனைவி காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. அதன் பின் காவல்துறையினர் கணவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.