மருத்துவ ஊழியர்களின் இக்கட்டான நிலையை வெளிப்படுத்தும் புகைப்படம்..!
IAS அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் 10 மணி நேரம் தொடர்ந்து கையுறைகளை அணிந்த ஒரு டாக்டரின் கைகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார்..!
IAS அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் 10 மணி நேரம் தொடர்ந்து கையுறைகளை அணிந்த ஒரு டாக்டரின் கைகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் கொஞ்சம் கூட மனம் தளராமல் எங்கள் முன்னணி வீராங்களான மருத்துவ ஊழியர்கள் இன்னும் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். மேலும், COVID-19 நோயாளிகளுக்காக தங்களளின் சொந்த தேவைகளையும் வசதிகளையும் தியாகம் செய்துள்ளனர் மருத்துவ ஊழியர்கள். அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. இருந்தாலும், அவர்களின் பணி சிரமங்கள் மற்றும் சவால்களால் வேதனை மிகுந்ததாகவே உள்ளது.
அதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்காகவாசம், முகமூடி, கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உடை ஆகியவற்றை தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் அதிகமான அணிந்து பணிபுரிவது. ஆனால், நமது நாட்டில் உள்ள வெப்பநிலையில், நீண்ட நேரம் முகமூடிகள் மற்றும் கையுறைகளுடன் பிளாஸ்டிக் சூட்களை அணிவது எப்படி இருக்கும் என நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?..
READ | கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!
சமீபத்தில், IAS அதிகாரி அவனிஷ் ஷரன், தொடர்ந்து 10 மணி நேர பணியின் முடிவில் தனது பாதுகாப்பு உடையை அகற்றிய பின்னர் ஒரு மருத்துவரின் கையைப் பற்றிய படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "10 மணிநேர கடமைக்குப் பிறகு அவரது மருத்துவ முன்னெச்சரிக்கை வழக்கு மற்றும் கையுறைகளை அகற்றிய பின்னர் இது ஒரு மருத்துவரின் கை. முன்னணி வீராங்கனைகளுக்கு தலைவனங்குகிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியதை தொடர்ந்து, மக்கள் சுகாதார ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்திற்கு நன்றி தெரிவித்து வருக்கின்றனர்.