துருக்கியில் இளம்பெண்கள் Ice Cream-னை நாவால் சுவைத்து சாப்பிடகூடாது என்னும் வழக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துருக்கியில் உள்ள  பக்சிலர் மாவட்டதில் மாநகராட்சி அமைப்பு ஒன்று, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு “being a lady” என்னும் இரண்டு மாதம் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு வாரத்துக்கு 2 மணி நேரம் நடைபெறுகிறது.


இளம்பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை உள்ளடக்கி இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிக்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் விண்ணப்பித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் இந்த பயற்சியில் இளம்பெண்கள் Ice Cream-னை நாவால் சுவைத்து சாப்பிடகூடாது என பயிற்சியாளர்கள் கற்பிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.


இந்த சிறப்பு பயிற்சியின் ஒரு பகுதி பாடமான “How to be an Istanbul lady” என்னும் பாடத்தில் தான் இவ்வாறான போதனை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஇடங்களில் பெண்கள் Ice Cream-னை நாவால் சுவைத்து சாப்பிடுவது, ஆண்களின் பாலுணவர்வை தூண்டும் என்பதால் பெண்கள் இவ்வாறு உண்வதை கைவிடவேண்டும் என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இவ்வாறு பெண்கள் உண்பதற்கு கூட கட்டுப்பாடு விதிப்பது என்பது அவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் விஷயம் என சிலர் தெரிவிக்கின்றனர்.