Tulsi Face Packs: பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு துளசி டீ தயாரித்து குடித்து வந்தால், உடலை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதே சமயம் துளசியை முகத்தில் தடவி வந்தால் பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். துளசி ஃபேஸ் பேக்குகள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மற்றும் முகப்பரு போன்றவற்றைக் குறைப்பது மட்டுமல்லாமல், முகத்திற்குப் பொலிவைத் தர உதவுகிறது. இந்நிலையில் பருக்கள் உள்ளிட்ட பல்வேறு தோல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் துளசியை எப்படி ஃபேஸ் பேக்குகள் போடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பருக்களை நீக்க துளசி ஃபேஸ் பேக் | Tulsi Face Packs For Pimples Removal:


துளசி மற்றும் வேம்பு:
இந்த ஃபேஸ் பேக் முகப்பருக்களை அகற்ற உதவும், மேலும் பல அற்புதமான விளைவுகளைத் தரும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க, துளசி மற்றும் வேப்ப இலைகளை சம அளவு எடுத்து, கழுவி அரைக்கவும். தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவ வேண்டும். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் புள்ளிகளை நீக்க இந்த ஃபேஸ் பேக்கை தடவவும்.


துளசி மற்றும் தயிர்:
துளசியை தயிருடன் கலந்து சுத்தப்படுத்தும் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் மூலம், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, சருமத்தில் பளபளப்பாக ஆகும். இந்த ஃபேஸ் மாஸ்க் பருக்களை நீக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை தயாரிக்க, வெயிலில் காய வைத்த துளசி இலைகளை அரைத்து தூள் செய்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் துளசி பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவவும்.


துளசி மற்றும் ஓட்ஸ்:
பளபளப்பான சருமம் வேண்டுமென்றால், துளசி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றின் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் துளசி பொடி மற்றும் ஓட்ஸ் பொடி இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதை பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளவும். பின்னர் முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்த பின்னர் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | மாதவிடாய் வயிற்று வலியால் அவதியா? ‘இந்த’ யோகாசனங்களை ட்ரை பண்ணுங்க..


துளசி மற்றும் தேன்:
இருமல் மற்றும் சளி ஏற்பட்டால் துளசி மற்றும் தேன் சாப்பிட அறிவுறுத்தப் படுகிறது. ஆனால் இவை இரண்டும் முக பருக்களையும் நீக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் தடிப்புகளை முற்றிலும் அகற்ற உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் துளசி பொடியை எடுத்து தேவைக்கு ஏற்ப தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவவும். இவை சருமத்திற்கும் ஈரப்பதத்தை தரும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வழி இருக்கா? இது தெரியாம போச்சே..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ