COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி: இந்தியாவில், பல வங்கிகளும், நிதி  நிறுவனங்களும் புதிய மற்றும் செக்ண்ட் ஹாண்ட் கார்கள் வாங்க கடன் வழங்குகின்றன. இருப்பினும், புதிய மற்றும் செகண்ட் ஹாண்ட் கார் கடன்களின் வட்டி விகிதங்களில்  பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. 


ஆக்சிஸ் வங்கியைப் (Axis Bank) பொறுத்தவரை, புதிய காருக்கு 8.65% -10.9% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. அதே நேரத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான கடன்கள் 14.4% -16.4%  என்ற அளவில் உள்ளது. இந்த விஷயத்தில், வித்தியாசம், 5% க்கும் அதிகமாக உள்ளது.


இருப்பினும், கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட சில அரசுக்கு சொந்தமான வங்கிகள், செகண்ட் ஹாண்ட் கார்கள் வாங்க குறைந்த வட்டி விகிதங்களில் கடன் வழங்குகின்றன. மற்ற தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்த வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் மிகவும் குறைவு.


ALSO READ | வங்கி கடன் கொடுக்க மறுக்கிறதா? இதோ உங்களுக்கான Tips

செகண்ட் ஹாண்ட் கார்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகள்


- கனரா வங்கி பயன்படுத்திய கார்களை வாங்க, அதாவது செகண்ட் ஹேண்ட் கார் வாங்க வழங்கும் கடன்களை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில், அதாவது 7.3% -9.9% க்கு வழங்குகிறது.


- பாங்க் ஆப் இந்தியா செகண்ட் ஹேண்ட் கார் வாங்க வழங்கும் கடன்களை 7.35% -8.55%  என்ற வட்டி விகிதத்தில் வழங்குகிறது


- செகண்ட் ஹேண்ட் கார் வாங்க வழங்கும் கடன்களை யூனியன் வங்கி 8.9% -10.5% வட்டி விகிதத்தில்  வழங்குகிறது


தனியார் வங்கிகள்: செகண்ட் ஹேண்ட் கார் வாங்க வழங்கும் கடன்களை குறைந்த வட்டி விகிதங்களில் வழங்கும் வங்கிகள்


- சவுத் இந்தியன் வங்கி 13.3% -13.75% வட்டி விகிதத்தில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கான கடன்களை வழங்குகிறது.


- எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி 13.75% -16% வட்டி விகிதத்தை வசூலிக்கிறது.
 
- பெடரல் வங்கி (Federal Bank) தற்போது 13.8% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வருகிறது.


ALSO READ | SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்


கடன் வழங்குவதற்கான கால அளவுகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், செகண்ட் ஹாண்ட் கார்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்காப்ன கடன்களை வழங்குகின்றன. எவ்வாறாயினும், எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்கான கடன்களை வழங்குகிறது, அதே நேரத்தில் பாங்க் ஆப் இந்தியாவின் கடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கான கடன் ஆகும்.


ALSO READ | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் இந்த “5” ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR