தற்போது கோடைகால தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். தமிழகத்தை தாண்டி பல சிறந்த சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆனாலும் பலரும் பட்ஜெட் பிரச்சனையால் சில இடங்களுக்கு செல்ல தயங்குகின்றனர். சுற்றுலா சென்றால் முதல் யோசிக்கும் இடம் தங்குவதற்கு தான். தங்கும் இடத்தின் விலை கம்மியாக இருக்கும் பட்சத்தில் பட்ஜெட்டில் நிறைய பணத்தை மிச்சப்படுத்தலாம். நீங்கள் ஒரு சர்வதேச பயணத்தை திட்டமிட்டு இருந்தாலும், அங்கும் கம்மியான விலையில் ஹோட்டல் அறைகள் கிடைக்கும். இந்தியாவில் பெங்களூருவில் தான் கம்மி விலையில் ரூம்கள் கிடைக்கின்றன. கம்மி பட்ஜட்டில் ரூம்கள் கிடைக்கும் இடத்தை பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பஞ்சு போன்ற சப்பாத்திக்கு... மாவு பிசைய ‘ஐஸ்’ யூஸ் பண்ணுங்க..!!


உடோன் தானி, தாய்லாந்து


தாய்லாந்திற்கு சுற்றுலா செல்வது பலரது கனவாக இருக்கும். அப்படி என்றால் உடோன் தானியை உங்கள் பட்டியலில் சேர்க்கவும். தாய்லாந்தில் உள்ள முக்கிய 4 நகரங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இந்த இடத்தில் பல சலுகைகளை பெறலாம். சைனீஸ் கேட், நோங் பிரஜாக் பார்க், உடோன் தானி நகர அருங்காட்சியகம் ஆகியவை இங்கு சிறப்பம்சங்கள். இங்கு ஒருநாள் ரூம் வாடகை ரூ. 2,333 தான். 


சுரபயா, இந்தோனேசியா 


இந்தோனேசியா அழகான மலைகள் மற்றும் கடற்கரைகளை கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் பெரிய பெரிய கட்டிடங்கள் உங்களை வியக்க வைக்கும். மே முதல் செப்டம்பர் வரை இந்த இடங்களுக்கு செல்லலாம். இந்த பகுதிகளில் பல்வேறு வகையான பாரம்பரிய கைவினைப்பொருட்கள் வாங்க முடியும். இங்கு ஒருநாள் ரூம் வாடகை ரூ. 3,250 தான். 


பெங்களூரு, இந்தியா


பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் பல ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கலாச்சாரம் மற்றும் கம்பீரமான இடங்களுக்கு பெயர் பெற்றது பெங்களூரு. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு வானிலை குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். இங்கு ஒருநாள் ரூம் வாடகை ரூ. 4,584 தான். 


சாயல், வியட்நாம்


மத்திய வியட்நாமில் உள்ள சாயல் நுயென் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்காக பெயர் பெற்றது. இங்கு பாரம்பரிய அரண்மனைகள் மற்றும் கோயில்களுடன் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக மாறியுள்ளது. இங்குள்ள கட்டிடக்கலையை உலகம் முழுவதும் பெயர் பெற்றது. இங்கு ஒருநாள் ரூம் வாடகை ரூ. 3,584 தான். 


Kaohsiung, தைவான்


தைவானின் இரண்டாவது பெரிய நகரமாக Kaohsiung உள்ளது. Kaohsiungல் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் யான்செங் மாவட்டம் ஒன்று. இங்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். இங்கு ஒருநாள் ரூம் வாடகை ரூ. 8,418 தான். 


குச்சிங், மலேசியா


சரவாக் ஆற்றங்கரையில் அமைந்துள்ள குச்சிங் கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கு பெயர் பெற்றது ஆகும். குச்சிங் இயற்கை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இந்த இடங்களுக்கு வரலாம். இங்கு ஒருநாள் ரூம் வாடகை ரூ. 4,084 தான். 


மேலும் படிக்க | காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ