MSSC: பெண்களுக்கான இந்த அசத்தல் திட்டத்தில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள், விவரம் இதோ
Mahila Samman Savings Certificate: இந்த கணக்கை திட்டத்தின் கால அளவுக்கு முன்னரே மூடுவதற்கான (MSSC Premature Closure Rules) விதிகள் என்ன? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் (MSSC), சாதாரண சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறந்த வட்டியை வழங்குவதற்காக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 7.5 சதவீத வட்டி கிடைக்கிறது. எம்எஸ்எஸ்சி -யில் முதலீடு செய்யும் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டி மற்றும் அசலுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறுவீர்கள்.
இந்தத் திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அனைத்து பெண்களின் மனதிலும் உள்ளது. MSSC கணக்கை திட்டத்தின் கால அளவுக்கு முன்னரே மூடுவதற்கான (MSSC Premature Closure Rules) விதிகள் என்ன? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
MSSC Premature Closure: விதிகள்
மஹிலா சம்மான் சேமிப்பு பத்திரம் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் உங்களுக்கு இடையில் பணம் தேவைப்பட்டால், 1 வருடம் முடிந்த பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த பணத்தில் 40% வரை எடுக்கலாம். அதாவது, 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால், ஒரு வருடம் கழித்து 80 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்.
மறுபுறம், கணக்கு வைத்திருப்பவர் கடுமையான நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ, மஹிலா சம்மான் சேமிப்பு பத்திர கணக்கைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு மூடலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் வட்டி விகிதத்தில் 2% குறைக்கப்பட்டு பணம் திரும்ப கொடுக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | ஜாக்கிரதை! பான், ஆதார் கார்டை வைத்து பலே மோசடி... பத்திரமாக வைத்திருக்க வழிகள் இதோ!
இடையில் வட்டி விகிதத்தை மாற்றுவதால் எந்த விளைவும் இல்லை
தற்போது மகிளா சம்மான் சேமிப்புக் பத்திர திட்டத்தில் 7.5 சதவீத வட்டி கிடைக்கிறது. ஆனால் இடையில் அரசு தனது வட்டி விகிதத்தை மாற்றினாலும், ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்கை அது பாதிக்காது. அதாவது, கணக்கு துவங்கிய நாளிலிருந்து எந்த வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதோ, அதுவே முதிர்வு வரை பொருந்தும்.
சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மஹிலா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) ஆகிய இரண்டு திட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவை. மேலும் இவை வெவ்வேறு நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் அனைத்து வயது பெண்களுக்குமானது.
ஒரு மைனர் பெண் குழந்தைக்கு, அவரது பாதுகாவலர் கணக்கைத் திறக்கலாம். வைப்புத் தொகை வரம்பு, முதிர்வு காலம் மற்றும் இரண்டு திட்டங்களின் வட்டி விகிதத்திலும் வித்தியாசம் உள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. அதேசமயம் MSSC இன் நோக்கம் பெண்களுக்கு அதிக வட்டி செலுத்தி, அவர்கள் சேமிப்பு மூலம் தங்கள் பணத்தை அதிகரிக்க உதவுவதாகும்.
மேலும் படிக்க | Old Pension Scheme அதிர்ச்சி செய்தி: அரசு அளித்த முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ