Indian railways: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் உங்களிடம் உள்ள நிலையில், வேறு சில முக்கியமான காரணங்களால் உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால், இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கோ அல்லது தேவைப்படும் வேறு  நபருக்கோ மாற்றலாம். அந்த சிறப்பு அம்சத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகு, பயணம் மேற்கொள்ள முடியாத  நிலை ஏற்பட்டால், அதனை ரத்து செய்யலாம். அல்லது ரத்து செய்வதற்கு பதிலாக வேறொரு ஒருவருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


உங்கள் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றும் முறை


தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற தனது குடும்ப உறுப்பினரின் பெயரில் தனது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ஒரு பயணி மாற்ற முடியும். இதற்காக, பயணி ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ஒரு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணிகளின் பெயர் டிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டு,  அவருக்கு பதிலாக பயணம் செய்ப்வரின் குடும்ப உறுப்பினரின் பெயர் சேர்க்கப்படுகிறது.


விண்ணப்பத்தை 24 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்


பயணி ஒரு அரசு ஊழியராக இருந்தால், அவர் தனது பணி நிமித்தம்  செல்கிறார் என்றால், அவர் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பம் போடலாம். திருமணத்திற்கு செல்லும் சமயத்திக் இதுபோன்ற சூழ்நிலை வந்தால், திருமண மற்றும் விருந்தின் அமைப்பாளர் தேவையான ஆவணங்களுடன் 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை நீங்கள் ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி NCC கேடட்டுகளுக்கும் கிடைக்கிறது.


ஒரு முறை மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்


இந்திய ரயில்வே டிக்கெட்டுகளை மாற்றுவது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் , அதாவது, பயணி தனது டிக்கெட்டை மற்றொரு நபருக்கு ஒரு முறை மட்டுமே மாற்றலாம், அந்த டிக்கெட்டை  பெற்றுக் கொண்ட அந்த நபர் , வேஎறொருவருக்கு மாற்ற முடியாது. ஒரு டிக்கெட்டை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


 


உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு  மாற்றுவது எப்படி ?


1. டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.


2. அருகில் உள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்கு செல்லவும்.


3. யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட வேண்டுமோ, அவரது, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்றை எடுத்துச் செல்ல வேண்டும்.


4. கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.


ALSO READ | LPG Booking: சிலிண்டரை புக் செய்யும் ஸ்மார்ட்டான வழிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR