தங்கக் கடன் என்பது மிகவும் அணுகக்கூடிய பாதுகாப்பான கடன் விருப்பங்களில் ஒன்றாகும். ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் குறைந்த ஆவணங்களுடன் அதிக மதிப்புள்ள அனுமதி மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பங்களைப் பெறலாம். மேலும், தங்கக் கடன் பெறுவதற்க்கான தகுதித் தேவைகள் எளிமையானவை. இதனால், கடன் வாங்குபவர்களிடையே இது சிறந்த தேர்வாக அமைகிறது. தங்கக் கடனுக்கான வட்டி விகிதம், பாதுகாப்பற்ற பிற கடன்களை விட குறைவாக இருப்பதால், கடன் வாங்கும் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க பலர் அதை நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், உங்கள் தங்கக் கடனை மிகவும் மலிவு வட்டியில் பெற பல்வேறு விருப்பங்கள் உள்ளன. தங்கக் கடன் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன், ஒப்புதலைப் பெறுவது விரைவாகவும் எளிதாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெவ்வேறு சலுகைகளை ஒப்பிடுக


கடன் வாங்கும் போது, அவசரப்படாமல்,​​ குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கியை அல்லது நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் கடன் தொகையில் வட்டி விகிதம் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற காரணிகளும் உள்ளன. கடனுக்கான கூடுதல் கட்டணங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் என்பவையும் இதில் அடங்கும். எனவே, தங்கக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, சிறந்த சலுகையைக் கண்டறிய கடன் வழங்கும் பல வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களை ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம். ஆன்லைன் தங்கக் கடன்கள் மூலம், உங்கள் தங்கக் கடனுக்கான தகுதி மற்றும் உங்கள் வீட்டின் வசதியின் அடிப்படையில் சிறந்த சலுகைகளை எளிதாகப் பெறலாம்.


குறைந்த வட்டி விகிதத்தை பெற பேச்சுவார்த்தை நடத்தவும்


கடன் வழங்குபவர் தங்கக் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகளை நிர்ணயித்தவுடன், நீங்கள் எப்போதும் வட்டி விகிதத்த்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம். மேலும், உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் வலுவான திருப்பிச் செலுத்தும் வரலாறு இருந்தால், உங்கள் தங்கக் கடன் வட்டி விகிதத்தில் சிறந்த சலுகையைப் பெற அந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்கவும்


நீங்கள் தங்க கடன் வழங்கும் சில நிறுவனக்களை ஒப்பிட்டுப் பார்த்தவுடன், திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும். இதில் மறைக்கப்பட்ட மற்றும் கூடுதல் கட்டணங்கள் அடங்கும். மறைக்கப்பட்ட கட்டணங்களில் பின்வருவன அடங்கும்:


1. முத்திரைத்தாள் ரொக்கக் கையாளுதல் அபராத வட்டி


2. கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள்


3. ஏல கட்டணம்


4. கூடுதல் கட்டணங்கள்: உங்கள் ஒட்டுமொத்த கடன் தொகையில் சேர்க்கக்கூடிய பிற செலவுகள், தாமதமாக செலுத்தும் கட்டணம் மற்றும் கடன் செயலாக்கக் கட்டணம் போன்றவை.


கடனை விரைவாக திரும்ப செலுத்த கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:


EMI முறை


கடனை திரும்ப செலுத்த நிலையான EMI விருப்பம் இது EMI செலுத்துவதற்கான மிகவும் பொதுவான முறையாகும். இந்த விருப்பத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் அசல் தொகை மற்றும் வட்டியை செலுத்துவீர்கள். இதனால் கடனில் இருந்து எளிதில் வெளிவரலாம்


வட்டி மட்டும் செலுத்தும் முறை


நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை மட்டுமே செலுத்த திட்டமிட்டால், வட்டித் தொகையை மட்டும் செலுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கடன் காலம் முடிந்த பிறகு, அசல் தொகையை மொத்தமாக செலுத்தலாம்.


கடன் காலம் முடிந்த பின் திரும்ப செலுத்துதல்


சிறிய தவணைகளில் திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக, கடன் வாங்கிய பணத்தை ஒரே நேரத்தில் திருப்பித் தரலாம். கடன் தொகையை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த இது உங்களை அனுமதிக்கிறது. எனவே நீங்கள் திருப்பிச் செலுத்தும் நேரத்தில் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்தலாம். கடன் காலத்தின் முடிவில் நீங்கள் திருப்பிச் செலுத்தும் தொகையானது, அதன் மீது விதிக்கப்படும் வட்டியுடன் அசல் தொகையும் அடங்கும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை


கடனின் ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப செலுத்தும் விருப்பம்


கடனளிப்பவரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, வழக்கமான மாதாந்திர தவணைகள் மூலம் வட்டி மற்றும் அசல் தொகையையும் செலுத்தலாம்.


உங்கள் கடன் தொகையை மதிப்பிடுங்கள்


தங்கக் கடனில் பணத்தைச் சேமிப்பதற்கான முக்கிய காரணி, உங்களுக்குத் தேவையான தொகையை மட்டுமே கடனாகப் பெறுவது. ஏனென்றால், அதிக அசல் தொகை அதிக வட்டியை இர்க்கும். உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகைக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே, ஏதேனும் ஒரு வங்கி அல்லது NBFC இல் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் நிதி தேவைகளை மதிப்பிடுங்கள்.


சரியான கடன் காலத்தை தேர்வு செய்யவும்


உங்கள் நகைக் கடனில் பணத்தைச் சேமிக்க, உங்கள் பட்ஜெட் அனுமதித்தவுடன் மொத்தக் கடன் தொகையையும் விரைவாகச் செலுத்துவது சிறந்தது. உங்கள் கடனுக்கான குறுகிய காலத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் கடனை முன்கூட்டியே முடிக்கலாம். இருப்பினும், குறுகிய கால அவகாசத்தில், நீங்கள் அதிக EMI செலுத்த நேரிடலாம்.


நகை கடனை முன்கூட்டியே செலுத்துதல்


கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு, நீங்கள் முழு நிலுவைத் தொகையையும் செலுத்தலாம். இருப்பினும், கடன் தொகையை முன் கூட்டியே செலுத்த சில கடன் வழங்குநர்கள் உங்கள் நிலுவைத் தொகையில் 1% -4% வரை மூடுவதற்கு முன் கட்டணமாக விதிக்கலாம். எனவே, அத்தகைய கூடுதல் கட்டணம் ஏதும் விதிக்காமல் கடன் வழங்குபவரைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தங்கக் கடனில் அதிகமாகச் சேமிக்க உதவும்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்.. 2 நாட்களுக்கு பிறகு இலவச ரேஷன் கிடைக்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ