புதுடெல்லி: நேரடி வரிகள் குறித்த முடிவுகளை எடுக்கும் உச்ச அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) கடந்த காலங்களில் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்து இறுதியாக இதன் கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று நிர்ணயிக்கப்பட்டது. அந்த காலக்கெடு இப்போது முடிந்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், ஆதார் அட்டை-யுடன் பான் கார்டை இணைப்பது தொடர்பாக ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் உள்ளன. புதன்கிழமையன்று CBDT வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள், மார்ச் 31, 2023க்குப் பிறகு "செயல்படாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் பான் இணைக்கப்படாவிட்டாலும், பான் கார்டை இன்னும் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம்.


மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது. ஆனால் அத்தகைய பான் அட்டைகள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும், ரீஃபண்டுகளை கிளெயிம் செய்வதற்கும் பிற ஐடி நடைமுறைகளுக்கும் மார்ச் 2023 வரை, அதாவது இன்னும் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். 


எனினும், பான் தொடர்பான் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது. ஜூன் 30, 2022க்குள் தங்கள் பான் எண்ணை பயோமெட்ரிக் ஆதாருடன் இணைக்கும் வரி செலுத்துவோர் தாமதக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். அந்த கால அவகாசத்துக்குப் பிறகு அபராதம் ரூ. 1,000 ஆக உயரும்.


மேலும் படிக்க | இனி ரயில் பயணத்தில் இந்த தொல்லைகள் இருக்காது! 


வரி செலுத்துவோர் சிரமத்தைக் குறைக்கும் வகையில், மார்ச் 29, 2022 தேதியிட்ட அறிவிப்பின்படி, வரி செலுத்துவோருக்கு 31 மார்ச் 2023 வரை ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, எந்த பின்விளைவுகளும் இல்லாமல், ஆதார்-பான் இணைப்புக்கான பரிந்துரைக்கப்பட்ட அதிகாரத்திடம், வரி செலுத்துவோர் தங்கள் ஆதார் குறித்த தகவல்களை தெரியப்படுத்தலாம். இப்படிப்பட்ட அறிவிப்புகள் தாமதக் கட்டணத்துடன் இணைக்கப்பட வேண்டும் என சிபிடிடி கூறியுள்ளது.


"இருப்பினும், மார்ச் 31, 2023 வரை, தங்கள் ஆதாரை பற்றி தெரிவிக்காத மதிப்பீட்டாளர்களின் பான், வருமான தாக்கல், ரீஃபண்டுகள் பெறுதல் ஆகிய நடைமுறைகளுக்குச் செயல்படும்" என்று சிபிடிடி அறிக்கை கூறியது.


உங்கள் பான் செயலிழந்தால் என்ன நடக்கும்?


மார்ச் 31, 2023க்குப் பிறகு, தேவைக்கேற்ப தங்கள் ஆதாரை பற்றிய விவரங்களை தெரிவிக்கத் தவறிய வரி செலுத்துவோரின் பான் செயலிழந்துவிடும். மேலும் இவர்களுக்கு, இந்தச் சட்டத்தின் கீழ் பான் அட்டையை வழங்ககாத, தெரிவிக்காத அல்லது மேற்கோள் காட்டாததற்கான அனைத்து விளைவுகளும் பொருந்தும் என்று சிபிடிடி மேலும் கூறியது.


உங்கள் பான் செயலிழந்துவிட்டால், அதிக கட்டணத்திலான டிடிஎஸ்-க்கு உட்பட்ட நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்வதிலிருந்து தடைசெய்யப்படுவீர்கள் (மியூச்சுவல் ஃபண்டுகள் போல பான் எண்ணை குறிப்பிடும் பரிவர்த்தனைகள்) மேலும் பிரிவு 272B இன் கீழ் அதிக அபராதம் விதிக்கப்படும்.


மேலும் படிக்க | April 1, 2022: இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய வரி விதிப்பு மாற்றங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR