அருணாசலப்பிரதேசத்தை (Arunachal Pradesh)  சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர், வழக்கம் போல் காலையில் பல் துலக்கினார். ஆனால், எதிர்ப்பாராத விதமாக  நடந்த மற்றொரு சம்பவம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலையை ஏற்படுத்திவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாசலபிரதேசத்தில் உள்ள அந்த நபர் பல் துலக்கும் போது தொண்டையும் அதனால், சுத்தம் செய்ய முயன்றபோது, ​​19 சென்டிமீட்டர் நீளமுள்ள ப்ரஷ் தற்செயலாக வயிற்றிற்குள் சென்று விட்டது.


இந்த சம்பவம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரோயிங் லோயர் திபாங் பள்ளத்தாக்கில் (Roing Lower Dibang Valley) வசிக்கும் 39 வயது நபர் காலையில் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது நடந்தது. அவர் பற்களை பிரஷ்ஷால் சுத்தம் செய்த பிறகு, தொண்டையையும் சுத்தம் செய்ய முயன்றபோது, ​​19 சென்டிமீட்டர் நீளமுள்ள பல் துலக்கும் பிரஷ் தற்செயலாக வயிற்றின் உள்ளே சென்று விட்டது.


அவரை அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்திரைத்தனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை நடத்தினர்.  ஆனால் அந்த மனிதனின் உணவுக்குழாயில் பல் துலக்கும் பிரஷ்ஷை, கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் பிரஷ், வயிற்றுக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தைதை அடுத்து, அவரை லேபரோடமி (laparotomy) பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார்.


ALSO READ | உலகக்கோப்பை வாங்கித் தந்த தல தோனியின் "Sixer ball" இப்ப எங்கே இருக்கு தெரியுமா..!!


அதிர்ஷ்டவசமாக,  பல் துலக்கும் பிரஷ் விழுங்கிய அந்த நபருக்கு அதிக வலி ஏதும் இல்லை. அவருக்கு, அடிவயிற்றில் லேசான வலி மட்டுமே இருந்தது.


அவரது அடிவயிற்றில் இருந்து பல் துலக்கும் பிரஷ்ஷை அகற்ற ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய 30- 35 நிமிடங்கள் ஆனது என்றூம் அவரது அடிவயிற்றில் இருந்து பல் துலக்கும் பிரஷ் நீக்கப்பட்டது. நோயாளி மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் தற்போது உள்ளார் என்றும் அவரது உடல்நிலை சரியாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ஒரு முழு பல் துலக்குதலை யாராவது எப்படி விழுங்க முடியும் என்று பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 


எப்படியோ, பல் துலக்குவதுடன் தொண்டையும் துலக்கி, அதன் மூலம் வயிற்றையும் சுத்தம் செய்து சாதனை படைத்து விட்டார் அந்த நபர்.


ALSO READ | Corona காலத்து Coffee house-ல் கஷாயமும் கிடைக்கும்! Menu-வில் புது வரவு!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR