2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 எனக் கொடுக்கப்பட்டுள்ளது, கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் விரைவாக நீங்கள் அதனை செய்ய வேண்டும்.  சில வழிமுறைகளை வருமான வரி செலுத்துவோர் பின்பற்றுவதன் மூலம் வரி விலக்கு பெறலாம், ஆனால் இந்த வரி விலக்கு புதிய வரி முறைக்கு இல்லை.  வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் அனைத்து வரி விலக்குகளையும் பெறலாம், உதாரணமாக எல்ஐசி பாலிசி எடுத்திருந்தால், அதன் பிரீமியத்தை பயன்படுத்தலாம்.  வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், வீட்டுக் கடன் ஆகியவற்றை வைத்து மீது 80சி பிரிவு கீழ் வரிவிலக்கு பெறலாம்.  பிரிவு 80 சிசிடி (1)-ன் கீழ் மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தை வாங்கியிருந்தாலும் வரிவிலக்கு பெறலாம், அதேசமயம் வரிவிலக்கு ரூ.1.5 லட்சத்தை தாண்டக்கூடாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | TDS தொடர்பான விதியில் ஜூலை 1 முதல் மாற்றம்: அதிக வரி செலுத்த வேண்டி வருமா? 
 வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்கள் வருமான வரியின் 24(பி) பிரிவின் கீழ் செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு பெறமுடியும்.  வருமான வரி விதிகளின்படி ரூ.2 லட்சம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம், அதேசமயம் சொத்து செல்ஃப் ஆக்குபைட் ஆக இருந்தால் மட்டுமே இந்த வரிவிலக்கு கிடைக்கும்.  மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டமான நேஷனல் பேமென்ட் சிஸ்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்தால், பிரிவு 80 சிசிடி (1பி)ன் கீழ் ரூ.50,000 கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.  மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்கு முதலாளி அளித்த பங்களிப்பை பிரிவு 80 சிசிடி மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.  முதலாளி மத்திய அரசாக இருந்தால் சம்பளத்தில் 14% விலக்கு வரம்பு இருக்கும்.



மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் எதையாவது எடுத்திருந்தால் அல்லது வழக்கமான உடல்நலப் பரிசோதனை செய்திருந்தால் பிரிவு 80டி-ன் கீழ் பிரீமியத்தை நீங்கள் பெறலாம்.  உங்களுக்காகவோ அல்லது உங்கள் கணவர்/ மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், பெற்றோருக்காகவும் நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால் ரூ.25,000 வரை பிரீமியமாகப் பெறலாம்.  அதேசமயம் உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால் வரி விலக்கு ரூ.50,000 ஆக இருக்கும்.  இதில் ரூ.5000 ஹெல்த் செக்கப்பிற்கு கிடைக்கும்.  மேலும் வரி விலக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.


மேலும் படிக்க | ITR Filing முக்கிய அப்டேட்: இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அதிக அபராதம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ