இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நமது தேசியக்கொடி காவி, வெள்ளை, பச்சை என மூவர்ணங்களை கொண்டது. மூவர்ணக்கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற விவசாயி ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் சுதந்திர உணர்வை மக்களிடையே ஊட்டுவதர்க்காகவும், சுதந்திரம் பற்றி தெரிந்துக்கொள்ளவும் பல பாடல்கள், படங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் திரைப்படங்களின் ஒலிக்கப்பட்ட சில தேசிய பாடல்கள் என்னனென்ன என்று பார்ப்போம்.