பெரிய பொருளாதார நாடு: இந்தியாவுக்கு 6வது இடம்- உலக வங்கி!!
உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி புள்ளி விபர அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி புள்ளி விபர அறிக்கை வெளியிட்டுள்ளது.
2017- ம் ஆண்டிற்கான பொருளாதார புள்ளி விபர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் 6- வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் GDP 2.597 ட்ரில்லியன் டாலராக உள்ளது. கடந்த 7 காலாண்டுகளாக சரிந்து வந்த இந்தியாவின் பொருளாதாரம் 2017 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஆசிய நாடுகளில் சீனாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.4% வளர்ச்சி அடைந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவின் GDP, பிரிட்டன் மற்றும் பிரான்சை முந்தி உள்ளது. இதனால் 2032 ல் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 3வது இடத்தை பிடிக்கும். பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.