உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஆயுத இறக்குமதியில் உலக அளவில் 12 சதவீத பங்களிப்புடன் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கிறது. 2014-2018 காலகட்டத்தில் சர்வதேச அளவில் 9.5 சதவீத ஆயுத இறக்குமதியுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 2.7 சதவீத ஆயுத இறக்குமதியுடன் பாகிஸ்தான் 11வது இடத்திலும் இருக்கிறது.


முன்னதாக 2013-2017 மதிப்பீட்டு ஆண்டுகளில் 13 சதவீத ஆயுத இறக்குமதியுடன் சர்வதேச அளவில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்திருந்தது. 2009 முதல் 2018-ம் ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் அமெரிக்க ஆயுத இறக்குமதி 81 சதவீதம் குறைத்துள்ளது. 


2014 - 2018 காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து மட்டும் இந்தியா 54 சதவீத ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.