இந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு!
சர்வதேச புலிகள் தினமான இன்று, இந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச புலிகள் தினமான இன்று, இந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-வது ஆண்டில் கடுமையாக சரிந்து 1700-ஆக இருந்தது. இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தன.
இதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கடந்த முறை கணக்கெடுப்பில் 2,226-ஆக அதிகரித்தது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70% ஆகும்.
இந்த நிலையில், சர்வதேச புலிகள் தினமான இன்று இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் தர மதிப்பீடு ஆகிய தகவல்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கெடுப்பின் படி, கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2967-ஆக உயர்ந்தது.
சுமார் 3,000 புலிகளுடன், உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆனமலை, களக்காடு - முண்டந்துறை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை ஆகிய 4 சரணாலயங்களும் 82.03 புள்ளிகளுடன் மிக நன்று பிரிவில் இடம்பிடித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு விருதும் வழங்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு கணெக்கெடுப்பில் 2226 புலிகள் இந்தியாவில் இருந்துள்ளன. இதுவே, 2010-ஆம் ஆண்டு 1706-ஆகவும், 2006-ல் 1411 ஆகவும் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.