குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதி தங்கள் குழந்தையாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியாஸ் பாய் - மீனா தம்பதிக்கு 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதால் பாபு என்ற பூனை ஒன்றை மகனாக தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பூனையுடன் திருப்பதிக்கு வந்தனர். பின்னர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து இரண்டு நாட்கள் திருமலையில் தங்கிவிட்டு, 13 ஆம் தேதி ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது தங்கள் மகனாக வளர்த்து வந்த பூனையை யாரோ சிலர் எடுத்துச் சென்றுள்ளனர். 


இந்நிலையில் தொடர்ந்து தங்கள் பூனையை தேடி வருகின்றனர். போலீசார் பூனை காணாமல் போனதை எந்த விதத்தில் நாங்கள் வழக்கு பதிவு செய்து தேடுவது என்று தெரியாமல், நீங்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர். இருப்பினும் தங்கள் பூனை கிடைக்கும் வரை குஜராத் செல்லமாட்டோம் என ரயில் நிலையத்திலேயே பூனைக்காக காத்திருக்கின்றனர். பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மீனா தம்பதியினரிடம் இருந்து மர்ம நபர்கள் ஏமாற்றி பெற்றுச் சென்றுள்ளனர். பாபு என்று பெயர்சூட்டப்பட்ட தங்கள் பூனையை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையத்தில் தம்பதி புகார் அளித்துள்ளர்.