இந்நாட்களில் தேசப்பற்று என்பது சிலருக்கு ஆகஸ்ட் 15-ஆம் நாளோடு முடிந்து விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இந்தியாவை சேர்ந்த 30-வயது இளைஞர் ஒருவர் தனது தேசப்பற்றை காண்பிக்க, தனது உடல் முழுவதும் 560 தியாகிகளின் பெயர்களை tattoo-வாக வரைந்துள்ளார். இதில் சிலரது புகைப்படங்களையும் இவர் வரைந்துள்ளார்.



அபிஷேக் கௌதன் என்ற இந்த இளைஞர், சுமார் ஒரு ஆண்டு காலம் ஆய்வு செய்து தியாகிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். பின்னர் மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் அனைத்து தலைவர்களின் பெயர்களையும் தனது உடலில் டேட்டோவாக வரைந்துள்ளார்.


இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் தியாகிகளின் குடும்பத்தார்களையும் சந்தித்துள்ளார். 


டேட்டோ கலைஞர்களின் 8 நாட்கள் முயற்சிக்கு பின்னர் இந்த டேட்டோ முயற்சி முழுமை பெற்றுள்ளது. இப்பணிக்காக ஆகாஷ் தினர் 6 மணி நேரம் டேட்டோ நிலையத்தில் நேரத்தை செலவிட்டுள்ளார்.


இதுகுறித்து அபிஷேக் தெரிவிக்கையில்,.. டோட்டோக்கள் நம் வாழ்நாள் முடியும் வரையிலும் நம்முடன் இருக்கும் ஒரு நண்பன் ஆகும். இந்த நண்பனின் உதவியால் நமது தேச தலைவர்களை நான் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.