Railways New Ticket Rules : இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு இப்போது குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் திரும்ப கிடைக்கும் பணம் (Train Ticket Refund New Rules) தொடர்பான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி சில ரயில் பயணிகள் முன்பதிவு  ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும்போது 75 விழுக்காடு பணத்தை திரும்ப பெற முடியும். இந்திய ரயில்வே துறை அறிவித்திருக்கும் இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும், ரயில் பயணிகளில் யாரெல்லாம் 75 விழுக்காடு ரயில் டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்?, அதற்கு ரயில்வே வகுத்திருக்கும் புதிய விதிமுறைகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று தொடங்கியதும் ரயில்வே துறை மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய சில சலுகைகளை அதிரடியாக நிறுத்தியது. இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டும் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். யாருக்கெல்லாம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் பயணத்தில் சிறப்பு சலுகை வழங்குகிறது என்ற விவரத்தை முழுமையாக பார்க்கலாம். 


மேலும் படிக்க | Railway Super APP : இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி, 2 நிமிடத்தில் ரயில் டிக்கெட் கன்பார்ம்


மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை


மாணவர்கள் மற்றும் குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு ரயில் பயணங்களின் போது இந்திய ரயில்வே சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதாவது மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிறரின் உதவியின்றி பயணிக்க முடியாத முழு பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு ரயில்வே சலுகைகளை வழங்குகிறது, அவர்களுக்கு பொது வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் 3ஏசியில் 75% வரை தள்ளுபடி வழங்குகிறது. 1 ஆம் வகுப்பு ஏசி மற்றும் 2 ஆம் வகுப்பு ஏசியில், இந்த பயணிகள் 50% தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள். ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில், 3ஏசி மற்றும் ஏசி நாற்காலி காருக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுடன் பயணிப்பவர்களுக்கும் அதே தள்ளுபடியை ரயில்வே கொடுக்கிறது.


செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு தள்ளுபடிகள்


முழுமையாக பேசவோ, கேட்கவோ இயலாத பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு துணையாக வருபவர்களுக்கும் அதே தள்ளுபடி கிடைக்கும். புற்றுநோய், தலசீமியா, இதய நோய், சிறுநீரக நோய்கள், ஹீமோபிலியா, காசநோய், எய்ட்ஸ், ஆஸ்டோமி, அனீமியா, அப்லாஸ்டிக் அனீமியா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி உண்டு.


மாணவர் தள்ளுபடிகள்


ரயில்வே துறை விதிகளின்படி, ரயில் கட்டணத்தில் மாணவர்களுக்கு டிக்கெட் சலுகை இருக்கிறது. தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் மாணவர்கள் அல்லது கல்விச் சுற்றுலாவுக்குச் செல்லும் மாணவர்கள் வெவ்வேறு வகுப்பு ரயில்களில் 50% முதல் 75% வரை தள்ளுபடியைப் பெறலாம். உங்களுக்கு ரயில்வே டிக்கெட் தள்ளுபடி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்: https://www.indianrail.gov.in.


ரயில்வே துறையில் மாற்றம்


இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதிமுறைகளை புகுத்தி வருகிறது. அண்மையில் முன்பதிவு டிக்கெட் காலத்தை அதிரடியாக குறைத்தது. 120 நாட்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று இருந்த விதிமுறையை 60 நாட்களாக குறைத்திருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே, 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்பவர்களில் 21 விழுக்காட்டினர் பயணத்தை மேற்கொள்ளாமல் டிக்கெட்டை ரத்து செய்கின்றனர் என்றும், சிலர் டிக்கெட்டை ரத்து செய்வதும் இல்லை, பயணிப்பதும் இல்லை என தெரிவித்துள்ளது. அதனால், இந்த புதிய விதிமுறை பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் இயக்கம் செய்ய உதவியாக இருக்கும் என்ற ரயில்வே விளக்கமளித்துள்ளது. 


மேலும் படிக்க | இந்த ரயில்வே ஸ்டேஷனில் என்டிரியாக பாஸ்போர்ட் அவசியம்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ