ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி: திருமலை ஏழுமலையானின் புகழ்பெற்ற கோவில் உள்ளது. இது ஒரு வைணவத் தலமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. நாட்டிலேயே பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று. நீங்களும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க விரும்பினால், உங்களுக்காக IRCTC ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த தொகுப்பில் திருப்பதி மட்டுமின்றி சுற்றியுள்ள 5 கோவில்களுக்கும் சென்று வரலாம். அதுமட்டுமின்றி உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற டூர் பேக்கேஜ் இதுவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஆர்சிடிசி இந்த பேக்கேஜ் குறித்த தகவலை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி இது ஒரு விமான சுற்றுலா (Flight Tour Package) தொகுப்பாக்கும். மேலும் 3 இரவுகள் மற்றும் 4 பகல்களைக் கொண்ட இந்த பேக்கேஜுக்கு, ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.24,000 செலவழிக்க வேண்டும். இந்த தொகுப்பு டிசம்பர் 1, 2023 அன்று சூரத்தில் இருந்து தொடங்கும். சுற்றுலாப் பயணிகள் உணவு மற்றும் பானங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. IRCTC மூலம் பயணிகளுக்கு காலை மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்துத் தரப்படும்.


மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குபவர்கள் PF கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பது எப்படி?


இந்த கோவில்களுக்கு தரிசனம் செய்ய அழைத்துச் செல்லபடுவார்கள்:
* திருப்பதி வெங்கடாசலபதி கோவில்
* பத்மாவதி கோவில்
* கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில்
* ஸ்ரீபுரம் பொற்கோயில் வேலூர்
* காணிப்பாக்கம் கோவில்



டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்:
டூர் பேக்கேஜ் பெயர்- ஆனந்த திருப்பதி ஐந்து கோவில் சுற்றுலா எக்ஸ் சூரத் (WMA75) [ Blissful Tirupati Five Temple Tour Ex Surat (WMA75)]
டெஸ்டினேஷன் கவர் - சென்னை, வேலூர் மற்றும் திருமலை
புறப்படும் தேதி- டிசம்பர் 1, 2023
உணவுத் திட்டம் - காலை உணவு மற்றும் இரவு உணவு
சுற்றுப்பயணம் - 4 பகல்கள்/3 இரவுகள்
பயண முறை - விமானம்


கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும்?
டூர் பேக்கேஜ்களுக்கு கட்டணம் மாறுபடும். இது பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்கு ஏற்ப இருக்கும். டிரிபல் ஆக்யூபென்சியில் தலா ஒரு நபருக்கு 24,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். டபிள் ஆக்யூபென்சிக்கு, ஒரு நபருக்கு ரூ.24,900 செலுத்த வேண்டும். அதேசமயம், சிங்கள ஆக்யூபென்சியில் தனி நபருக்கு ரூ.30,400 வசூலிக்கப்படும். மறுபுறம் 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைக்கு, படுக்கையுடன் ரூ.25,100 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ.19,800 கட்டணம் வசூலிக்கப்படும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு, 15,600 ரூபாய் செலவழிக்க வேண்டும்.


மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ