புதுடெல்லி: சில சமயங்களில் நாம் திட்டமிட்டபடி, பயணம் மேற்கொள்ள முடியாத காரணத்தினால், வாங்கிய ரயில்வே டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய தேவை உண்டாகிறது. டிக்கெட்டை ரத்து செய்வதற்கு முன் ரயில்வேயின் இந்த சிறப்பு விதிகளை நீங்கள் அறிந்திருந்தால், நிறைய பணத்தை மிச்சப்படுத்தலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிக்கெட்டை ரத்து செய்வதற்கு முன்பு, அதனை எப்போது செய்யும் நேரத்தின் மீக சிறப்பாக கவனம் செலுத்துவது முக்கியம். ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் மதிப்பில் இருந்து ஓரளவு பணத்தை திரும்பப் பெறுவீர்கள், ஆனால் 30 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. 


ரீபண்ட் விதிகள்


முன்பதிவு வகுப்பு மற்றும் ரத்து செய்த நேரத்திற்கு ஏற்ப ரத்து கட்டணம் மாறுபடும், உறுதிப்படுத்தப்பட்ட, அதாவது கன்பர்ம் டிக்கெட்டை ரத்து செய்த பிறகு ரீபண்ட் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய முழுமையான தகவல்களை erail.in வலைதளத்தில் காணலாம். Erail.in முகப்புப் பக்கத்தில் பணத்தை ரீபண்ட் பெறுவதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 


ரத்து செய்யும் நேரத்தில் கவனம் 


ரயில்வே விதிகளின்படி, உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட, அதாவது கன்பர்ம் டிக்கெட் இருந்தால், ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட அந்த டிக்கெட்டை (Railway Ticket) ரத்து செய்யும், நீங்கள் ரத்து செய்யும் நேரத்திற்கு ஏற்ப ரீபண்ட் கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இருந்தால், ரீபண்ட் கிடைக்காது. ரயில் புறப்பட 4 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் 50% வரை திரும்பப் பெறலாம். பண இழப்பை தடுக்க டிக்கெட்டை ரத்து  செய்யும்  நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.


ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


டிக்கெட் உறுதி செய்யப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கும் 48 மணி நேரத்திற்கும் முன்பாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் மதிப்பில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் அல்லது ரூ .60  இரண்டில் எது அதிகமோ அந்த தொகை வசூலிக்கப்படும். 


இரண்டாம் வகுப்பு டிக்கெட் ரத்து விதிகள்


உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் வகுப்பிற்கு ஏற்ப ரயில்வே வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கிறது. இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்ய​​ ரூ.60, இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பருக்கு ரூ .120, 3AC க்கு ரூ .180, 2AC க்கு ரூ .200 மற்றும் முதல் ஏசி எக்ஸிக்யூடிவ் வகுப்பிற்கு ரூ .240  என்ற அளவில் டிக்கெட்டில் இருந்து கழிக்கப்படுகிறது.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் ரத்து விதிகள்


நீங்கள் ஸ்லீப்பர் வகுப்பில் முன்பதிவு செய்திருந்தால், உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் அல்லது ஆர்ஏசியில் இருந்தால், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்ய, ரயில்வே, ஒரு பயணியிடம் இருந்து ரூ.60 வசூலிக்கிறது.


ALSO READ | Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR