ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை
Indian Railways Rules: நமது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் வேறு ஒருவரின் பெயரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் கன்ஃபர்ம் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
Indian Railways Rules: ரயில் பயணம் அனைவருக்கும் ஏற்ற வகையிலான சிறந்த போக்குவரத்து. இதில் பயணம் செய்ய நாம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில், சில காரணங்களால் குறிப்பிட்ட நாளில் உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றாலோ, அல்லது உங்களுக்கு பதிலாக மற்றொரு குடும்ப உறுப்பினரை அனுப்ப விரும்புகிறீர்கள் என்றாலோ, டிக்கெட்டை மாற்றும் வசதி உள்ளது.
நமது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் வேறு ஒருவரின் பெயரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் கன்ஃபர்ம் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் நீங்கள் பயணம் செல்லும் தேதியை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்நிலையில், உங்கள் பிரச்சனைக்கு ரயில்வே தீர்வு கண்டுள்ளது. இப்போது உங்கள் பெயரை வேறொருவருக்கு மாற்றவோ அல்லது பயணத் தேதியை மாற்றவோ உங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியதில்லை.
டிக்கெட்டை வேறோருவருக்கு மாற்றுவதற்கான வழிமுறை
டிக்கெட்டில் பெயரை மாற்றும் வசதி ஆஃப்லைன் டிக்கெட்டுகளில் மட்டுமே உள்ளது. அதாவது, முன்பதிவு கவுண்டரில் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். மேலும், உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை உங்களுக்கு நெருக்கமான மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு மட்டுமே மாற்ற முடியும். அதாவது, உங்களுக்குப் பதிலாக உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது மகன் அல்லது மகளின் பெயரின் பெயரில் டிக்கெட்டை மாற்றலாம். மாணவர்கள் அல்லது அதிகாரிகளின் குழு டிக்கெட்டைப் பெற்றிருந்தால், இதிலும் பெயரை மாற்றும் விருப்பம் உள்ளது.
டிக்கெட்டில் பெயரை மாற்றுவதற்கான வழிமுறை
1. முதலில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே சென்றடைய வேண்டும். எனவே அருகில் உள்ள ரயில்வே முன்பதிவு கவுண்டருக்கு செல்லவும்.
2. பின்னர் டிக்கெட்டில் பெயரை மாற்ற, எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.
3. டிக்கெட் உங்கள் பெயரில் இருந்தால், கவுண்டரில் உங்களது மற்றும் யாருடைய பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறதோ, அந்த இருவரின் ஐடியையும் நீங்கள் வழங்க வேண்டும்.
4. பின்னர் தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு, ரயில்வே அதிகாரி புதிய பயணியின் பெயருக்கு டிக்கெட்டை மாற்றித் தருவார்.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் தாமதமானால்... பயணிகளுக்கு கிடைக்கும் சில சலுகைகளும் வசதிகளும்
டிக்கெட்டில் பயணத் தேதியை மாற்றுவதற்கான செயல்முறை
1. ஆஃப்லைனில் அதாவது கவுண்டரில் இருந்து டிக்கெட்டை வாங்கியிருந்தால், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டுடன் முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.
2. உங்கள் பயணத் தேதியை முதலில் கவுண்டரில் உங்கள் அசல் டிக்கெட்டைக் காட்டி முன்பதிவு செய்ய வேண்டும் அல்லது அதற்குப் பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
3. இதற்குப் பிறகு, கவுண்டரில் இருக்கும் ரயில்வே ஊழியர் தேதியை மாற்றி மற்றொரு டிக்கெட்டை உங்களுக்கு வழங்குவார்.
4. பயணத்தின் தேதியை மாற்றுவதற்கான விருப்பம் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கும். அதாவது தட்கல் டிக்கெட்டில் இந்த வசதி இல்லை.
5. பயணிக்கு ஒருமுறை மட்டுமே பயணத் தேதியை மாற்ற முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேதியில் காலி இருக்கை அல்லது படுக்கை இருந்தால் மட்டுமே டிக்கெட்டை அந்த தேதிக்கு மாற்ற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ