Indian Railways: ரயில் பயண திட்டத்தில் திடீர் மாற்றம்? பயணத் தேதியை மாற்றலாம்!
பல நேரங்களில் நாம் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ள்ள நிலையில், பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் விரயமும் ஆகும்.
Indian Railways: பல நேரங்களில் நாம் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ள்ள நிலையில், பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் விரயமும் ஆகும்.
ஆனால் ரயில்வே விதிகளின்படி, உங்களுக்கு டிக்கெட் தேதியை மாற்ற வழி உள்ளது. உங்கள் ரயில் பயணத்தை நீங்கள் 'முன்தேதி' அல்லது 'பின்தேதி' க்கு மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், உங்கள் பயணத்தின் போர்டிங் ஸ்டேஷனையும் மாற்றலாம்.
தேதியை எப்படி மாற்றுவது?
நீங்கள் போர்டிங் செய்ய வேண்டிய நிலைய மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பதன் மூலமோ அல்லது ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையத்திற்குச் செல்வதன் மூலமோ பயணிகள் பயணத்தின் போர்டிங் நிலையத்தை மாற்றலாம். இந்த வசதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் டிக்கெட்டுகளில் கிடைக்கிறது.
பயணத்தை நீட்டிக்க முடியும்
உங்கள் பயணத்தைத் தொடர விரும்பினால், அதாவது, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையத்தைத் தாண்டிச் செல்ல விரும்பினால், இதற்காக, பயணிகள் இலக்கை அடையும் முன் அல்லது பதிவு செய்த பிறகு டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் பயண விவரம் பற்றிய தகவலை கொடுத்து உரிய அனுமதி பெறலாம்.
ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!
பயணத் தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்
ஸ்டேஷன் கவுண்டரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை பயணத் தேதியில் ஒருமுறை மட்டுமே 'முன்தேதிக்கு' அல்லது 'பின் தேதிக்கு' மாற்றலாம். பயணத் தேதியை மாற்றி அமைக்க பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு அலுவலகத்திற்குச் சென்று தனது டிக்கெட்டைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வசதி ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளில் இந்த வசதி இருக்காது.
உங்கள் ரயில் பயணத் தேதியை எப்படி மாற்றுவது
இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு அவர்களின் உறுதிசெய்யப்பட்ட/ஆர்ஏசி/காத்திருப்பு டிக்கெட்டில் பயணத் தேதியை மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் பயணத் தேதியை 'முன்தேதிக்கு' அல்லது 'பின் தேதிக்கு' மாற்ற முடியும். இது தவிர, பயணிகள் தங்கள் பயணத்தை நீட்டிக்கவும், தங்கள் பயணத்தின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றவும் மற்றும் உயர் வகுப்பிற்கு தங்கள் டிக்கெட்டுகளை மேம்படுத்தவும் ரயில்வே அனுமதிக்கிறது. இந்த வசதிகளில் சில ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும், சில ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்குக் கிடைக்கும்.
ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR