புதுடெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி சார்பாக நாட்டின் முதல் தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (Tejas Express)  அக்டோபர் 4 முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் லக்னோ முதல் டெல்லி வரை முதலில் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தபடும். இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல சிறப்பு வசதிகள் வழங்கப்படும். தற்போது அறிவித்துள்ள வசதி, நாட்டில் இதுபோன்ற அறிவிப்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மட்டுமே பயணிகளுக்கு வழங்க உள்ளது. அதாவது, இந்த ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிகப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது அதாவது அக்டோபர் 5-ஆம் தேதி இரவு 03.35 மணிக்கு புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 10.05 மணிக்கு லக்னோவை எட்டும். லக்னோ - புது தில்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (82501) ரயிலின் வழக்கமான சேவை அக்டோபர் 6 முதல் தொடங்கும். இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவையானது லக்னோவிலிருந்து காலை 06.10 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் மதியம் 12.25 மணிக்கு புதுடெல்லியை அடையும். 


டெல்லியில் இருந்து லக்னோ அல்லது லக்னோவவில் இருந்து டெல்லிக்கு செல்லும் போது ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால், தேஜாஸில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.


இதேபோல், இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், ஒவ்வொரு பயணிகளுக்கும் 250 ரூபாய் வழங்கப்படும். இந்த இழப்பீடு ஐ.ஆர்.சி.டி.சியிலிருந்து பயணிகளுக்கு வழங்கப்படும். இது தவிர, இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி யிலிருந்து ரூ.25 லட்சம் பயண காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி கூடுதல் பணம் வசூலிக்காது. இதுபோன்ற சலுகைகளை வழங்கும் நாட்டில் முதல் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்று சொல்லலாம்.


ரயிலின் 10 அம்சங்கள்: 


> தேஜாஸ் ரயிலில் சலுகை டிக்கெட் இருக்காது. மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.


> ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்தில் இருந்து ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே வரை முன்பதிவு கிடைக்கும். எந்தவொரு உடனடி ஒதுக்கீடு மற்றும் பிரீமியம் ஒதுக்கீடு இருக்காது.


> வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, 5 படுக்கை இடங்கள், 50 நாற்காலி இடங்கள் கிடைக்கும்.


> ரயிலில் பயணிக்க Paytm, Phone Pay, Make Moy Trip, Google Pay, Ibibo மற்றும் Rail Passenger ஆகிய ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். ரயிலுக்கு முன்பதிவு செய்வதற்கான காலம் 60 நாட்கள் ஆகும்.


> தேஜாஸ் ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ரூ.25 லட்சம் இலவச காப்பீடு கிடைக்கும்.


> பயணத்தின் போது நீங்கள் தேநீர் குடிக்க விரும்பினால், தானியங்கி தேநீர் மற்றும் காபி இயந்திரங்கள் மூலம் பருகலாம். இந்த இயந்திரம் ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


> இது தவிர, பயணிகளுக்கு ரயில் நீர் பாட்டில் மற்றும் அனைத்து பெட்டிகளிலும் ஆர்ஓ (OR) இயந்திரம் பொருத்தப்படிருக்கும்.


> பயணம் செய்பவர்களின் பொருட்களை வீட்டிலிருந்து எடுத்து செலலும் சிறப்பு வசதி வழங்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 


> விமான பணிப்பெண்களைப் போலவே, ரயிலிலும் பணிப்பெண்கள் பயணிகளுக்கு சேவை செய்வார்கள். 


> நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது அலுப்பு (போர்) ஏற்பட்டால், அதற்காக ரயிலில் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது. 


தேஜஸ் எக்ஸ்பிரஸ் லக்னோவிலிருந்து டெல்லிக்கு இடையேயான தூரத்தை 6.15 மணி நேரத்தில் கடக்கும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தேஜாஸின் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.