அயோத்தி குழந்தை ராமரை தரிசிக்க ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு இன்று ஒரு பொன்னான நாளாகும். ராமர் கோவிலில் குழந்தை ராமரின் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையுடன் நிறைவடைந்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அயோத்தியில் கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோயில் கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான உதாரணம் ஆகும். ராமர் கோவில் நகர்ப்புற பாணியில் கட்டப்பட்டுள்ளது. தற்போது அயோத்தி உலகம் முழுவதும் பேசும் மையமாக மாறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் கோவிலில் வைக்கப்பட்ட ராமர் சிலை 51 இன்ச் மற்றும் 1.5 டன் எடை உள்ள குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை கர்நாடக மாநிலம் மைசூரு நகரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் வடிக்கப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் 5 வயதான குழந்தை ராமர் சிலை இன்று பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நீங்களும் அயோத்திக்குச் சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்ய விரும்பினால். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜை நீங்கள் கட்டாயம் தவறவிடக் கூடாது. இந்த டூர் பேக்கேஜில் பல சிறந்த வசதிகளை நீங்கள் பெறுகிறீர்கள். இந்த எபிசோடில், ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம் -


IRCTC இன் இந்த டூர் பேக்கேஜின் பெயர் ஹோலி அயோத்தியா வித் கயா, காசி & பிரயாக்ராஜ் எக்ஸ் பெங்களூரு (HOLY AYODHYA WITH GAYA, KASHI & PRAYAGRAJ EX BENGALURU)  ஆகும். இந்த டூர் பேக்கேஜின் கீழ், கயா, காசி, பிரயாக்ராஜ், சாரநாத் ஆகிய இடங்களோடு அயோத்திக்கு (Gaya, Varanasi (Kashi), Prayagraj and Ayodhya) செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐஆர்சிடிசியின் (Irctc Tour Package) இந்த டூர் பேக்கேஜில், மொத்தம் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.


மேலும் படிக்க | அயோத்தி குழந்தை ராமர் முழு அலங்காரத்தில்... பிரதிஷ்டைக்கு பின் வெளியான புகைப்படங்கள் உள்ளே!


இது ஐஆர்சிடிசியின் ஃப்ளைட் டூர் பேக்கேஜ் ஆகும். இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் விமானம் மூலமா பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். மேலும் இந்த சிறப்பு டூர் பேக்கேஜானது வருகிற மார்ச் 25 ஆம் தேதி, 2024 அன்று தொடங்குகிறது.


அதுமட்டுமின்றி இந்த டூர் பேக்கேஜில் பல வசதிகளையும் சுற்றுலா பயணிகள் பெறுகிறீர்கள். உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு அனைத்தும் டூர் பேக்கேஜின் கீழ் ஏற்பாடு செய்துத் தரப்படும். இது தவிர, நீங்கள் தங்குவதற்கான ஹோட்டல் ஏற்பாடுகளும் இந்த டூர் பேக்கேஜின் கீழ் செய்துத் தரப்படும்.


கட்டணத்தைப் பற்றி நாம் பேசுகையில், இது குறித்து IRCTC இணையதளத்தில் இதுவரை எந்த தகவலும் அல்லது புதுப்பிப்பும் வழங்கப்படவில்லை. சுற்றுப்பயணம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, இந்த இணைப்பைப் பார்வையிடலாம் https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SBA23.


மேலும் படிக்க | 3 ஏசி மற்றும் 3 ஏசி எகானமிக்கும் என்ன வித்தியாசம்? கட்டாயம் படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ