₹22,299 செலவில் 5 நாள் சுற்றுலா பயணமாக அந்தமான் செல்ல இந்தியன் ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தாவில் துவங்கும் இந்த சுற்றுப்பயணமானது போர் பிளார் மற்றும் ஹேவ்லாக் தீவுகள் ஆகிய இடங்களில் இடம்பெற்று பின்னர் கொல்கத்தா திரும்பி கொண்டு வருகிறது.


இது தொடர்பான முழுதகவல்களை IRCTC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com-ல் இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. விமானத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பயணமானது மளிவு விலை விமான சேவையான IndiGo விமான சேவையில் இடம்பெறவுள்ளது. 


--- சுற்றலா விவரங்கள் ---


  • சுற்றுலா பெயர் - Andaman Delights Ex Kolkata

  • இலக்கு - Port Blair Havelock

  • பயண நிலைமை - விமானம் மூலம் - கொல்கத்தா - போர்ட் பிளார் - கொல்கத்தா

  • வகுப்பு - ஸ்டேன்டர்ட்

  • சுற்றுலா தேதி - ஆகஸ்ட் 10, 2019

  • காலங்கள் - 04 இரவு / 05 பகல்


--- விலை பட்டியல் ---


  • இரண்டு பேர் - ₹23,099 (நபர் ஒருவருக்கு)

  • மூன்று பேர் - ₹22,299 (நபர் ஒருவருக்கு)

  • குழந்தை படுக்கையுடன் - ₹20,799 (நபர் ஒருவருக்கு)

  • குழந்தை படுக்கை இல்லாமல் - ₹15, 469(நபர் ஒருவருக்கு)


--- விமான விவரம் --- 


  • கொல்கத்தா - போர்ட் பிளார் : 6E-282(விமான எண்)

  • போர்ட் பிளார் - கொல்கத்தா : 6E-6616(விமான எண்)