தனது 4-வயது குழந்தைக்கு தாய்பால் ஊட்டிய தாய், சமூக வலைதளத்தில் பெரிதும் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக தாய்பாலூட்டும் வாரம் கடந்த ஆக., 1 முதல் ஆக., 7-ஆம் நாள் வரை அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல ஊடகங்கள் பலவும் தாய் பாலின் முக்கியத்துவம், அவசியம் குறித்து பல சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர்.


அந்த வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான Love What Matters, நன்கு வளர்ந்த குழந்தைகளுக்கு தாப்பால் ஊட்டும் தாய்மார்கள் குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றினை வெளியிட்டது. பொதுவாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் 1-லிருந்து 2 வயது வரையில் தாய்பால் ஊட்டுவதினை பார்த்திருப்போம், ஆனால் இந்த கட்டுரையில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் குறித்து கட்டுரை வெளியாகி இருந்தது.


அந்தவகையில் இந்த கட்டுரையின் தலைப்பபு படத்தில் இடம்பெற்றிருந்த பெயர் தெரிவிக்கப்படாத தாய் ஒருவரின் புகைப்படத்தினை இந்த பத்திரிக்கை தனது Instagram பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.


தனது இரண்டு குழந்தைகள் முறையே 4.5-வயது மற்றும் 3.5-வயது குழந்தைகளுக்கு அவர் தாய்பாலூட்டும் அந்த புகைப்படத்தினை குறித்து இணையவாசிகள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.



இவ்வாறு வளர்ந்த குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெட்கப்ட வேண்டும் என சிலர் இந்த பதிவிற்கு பதில் பதிவு இட்டுள்ளனர். மற்றொருவர்... ‘இது ஒன்றும் சமூக திருத்த செயலாக தெரியவில்லை’ என கிண்டலாக தெரிவித்துள்ளார்... மேலும் பலர் தங்கள் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் புகைப்படத்தில் இருக்கும் தாய்... ’என் குழந்தைகள் நன்கு வளரும் வரை அவர்களுக்கான ஊட்டச்சத்தினை வழங்குவது ஒரு தாயாக என் கடமை, அதை நான் பெருமையா செய்வேன்... யார் தடுப்பினும்’ என குறிப்பிட்டுள்ளார்.


American Academy of Pediatrics recommends-ன் கருத்துப்படி இளம் குழந்தைகளுக்கு 6 மாத்ததில் இருந்து 12 மாதங்கள் வரை தாய்பால் என்பது அவசியமாகிறது. அதன் பின்னரும் தொடருதல் என்பது தாயுக்கும் அவரது பிள்ளைக்குமான புரிதல் தான் என குறிப்பிட்டுள்ளது.