எழுதினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது? - உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
Scribbled Currency Notes : இந்திய ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதியிருந்தால் அவை செல்லாது என ஆர்பிஐ கூறியது உண்மையா பொய்யா என்று இதில் காணலாம்.
Scribbled Currency Notes : 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதினால் அவை செல்லாது என்று பொதுவாக ஒரு பேச்சு உள்ளது. இதனால், எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் நடந்துவருகிறது.
அந்த வகையில், சமூக ஊடகங்களில் வரும் அறிக்கைகள் மற்றும் செய்திகள் மூலம் இந்த வகையான வதந்திகள் மக்களிடையே அதிகம் பரவுகிறது. சமீபத்தில், ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தால் அந்த ரூபாய் நோட்டுகள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என்று ஒரு செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. அந்தச் செய்தியின்படி, புதிய நோட்டுகளில் எதையும் எழுதினால் அந்த நோட்டு செல்லாது மற்றும் அதை சட்டப்பூர்வமாக மாற்ற முடியாது எனவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | உங்ககிட்ட இந்த 50 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்
PIB இந்த செய்தி குறித்த அதன் உண்மைச் சரிபார்ப்பில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அத்தகைய புதிய வழிகாட்டுதல்கள் என்று எதுவுமில்லை என அதனை முற்றிலுமாக மறுத்தது. கரன்சி நோட்டுகளில் எழுதினால் அவை செல்லாது என்ற போலிச் செய்தியை அது நீக்கியுள்ளது.
எழுத்துகள் உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், அவை தொடர்ந்து சட்டப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பதையும் PIB உறுதி செய்கிறது. அவை செல்லுபடியாகாது என கடைகளும், வங்கிகள் அவற்றை வாங்க மறுக்க முடியாது என உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், ரூபாய் நோட்டுகளை சுத்தமானதாக வைத்திருக்கும் கொள்கையின்கீழ், பேனாவால் எழுதுவது நோட்டுகளை சிதைத்து, அதன் ஆயுளைக் குறைக்கும் என்பதால், அதில் எழுத வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் PIB அறிவுறுத்தியுள்ளது.
மேலும், BHIM UPI இப்போது அதிகாரப்பூர்வ WhatsApp சேனலைக் கொண்டுள்ளது என்றும் இது பயனர்கள் சமீபத்திய அம்சங்கள் மற்றும் சலுகைகளுடன் அப்டேட்டில் இருக்க உதவும் என்றும் ஒரு செய்தி பரவியது. தொடர்ந்து, அந்த சேவையைப் பெற, வாடிக்கையாளர்கள் +918291119191 என்ற எண்ணில் 'Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். PIB அதன் உண்மைச் சரிபார்ப்பில் இது உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உங்களிடம் உள்ள ரூ.500 நோட்டு உண்மையானதா? போலியா? இப்படி கண்டறியலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ