குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு  3 ஆவது குழந்தை பெறும் பெற்றோருக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்குவதாக இத்தாலி அரசு அறிவிப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவர உலகநாடுகள் அனைத்தும் பலவகையான புதுப்புது வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள நிலையில் பிறப்பு விகிதத்தை உயர்த்த அந்நாட்டு அரசுகள் பல்வேறு திட்டங்களை இயற்றி வருகிறது. 


இந்த நிலையில் 3 ஆவது குழந்தை பெற்றால் அந்த தம்பதியினருக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று இத்தாலி அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.  இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்றுக் கூறப்படுகிறது. அதன்படி, சில கால அளவுக்கு அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும். இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றை 3 ஆவது குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.


ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. இதனால் இத்தாலியில் இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.


ஆண்/பெண்கள் திருமணம் ஆகாமல் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கிறார்கள். மேலும், சிலர் குடும்பச் சூழலை தவிர்த்து வாழ்கின்றனர். அதனால் திருமணம் செய்து கொள்வது இல்லை. எனவே குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் இல்லாததால் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 


அதுமட்டுமின்றி, தம்பதியினர் பலர் குழந்தையின்மை பிரச்னையும் உள்ளது. குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கும் தம்பதிகளும் 1 அல்லது 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டுவதில்லை. இது போன்ற எண்ணங்களை மாற்றுவதற்காகவே ஐரோப்பிய நாடுகளில் பிறப்பை ஊக்குவிக்க சலுகைகள் வழங்கப்படுகின்றன.