வருமான வரி ரீஃபண்ட்: வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது 16 நாட்களுக்குள் வருமான வரித் துறையால் உங்களுக்கு ரிட்டர்ன் வழங்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா இதை பற்றி பேசுகையில், 'வரி செலுத்துவோருக்கு சேர வேண்டிய வரிகளை திரும்ப செலுத்தும் சராசரி நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், 80 சதவீத வழக்குகளில், ரிட்டர்ன் தாக்கல் செய்த முதல் 30 நாட்களில் 'ரீஃபண்ட்' வழங்கப்பட்டது.' என்று கூறினார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெறும் 16 நாட்களில் ரிட்டர்ன் வரும்


தொழில்நுட்பத்தின் பயன்பாடு வருமான வரி செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது என்றும் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் வரி செலுத்துவோர் 'செயல்பாட்டு செயல்முறையை எளிதாக்குவதை' உறுதி செய்வதாகவும் CBDT தலைவர் கூறினார். 'ரிடர்னை திரும்ப செலுத்தும் செயல்முறையை நாங்கள் விரைவுபடுத்தியுள்ளோம். மேலும் வரி தொகையை திரும்ப அனுப்பும் செயல்முறை விரைவான விகிதத்தில் செயல்படுத்தப்படுகிறது. 2022-23 நிதியாண்டில், வரி செலுத்துவோர் வரி திரும்பப் பெறுவதற்கான சராசரி நேரம் 16 நாட்கள் மட்டுமே, இது 2021-22 இல் 26 நாட்களாக இருந்தது.' என்று குப்தா மேலும் தெரிவித்தார். 


வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது


வியாழன் அன்று வருமான வரித் துறை ஏற்பாடு செய்த ஆன்லைன் 'சம்வாத்' அமர்வில், ஐடிஆர் தாக்கல் செய்த ஒரு நாளுக்குள் செயல்முறையை முடிவு செய்வது தொடர்பான பணிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குப்தா கூறியுள்ளார். இந்த மதிப்பீடு 2021-22ல் 21 சதவீதத்திலிருந்து 2022-23ல் 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | ITR Filing For AY24: வருமான வரி தாக்கலின் போது இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!


22.94 லட்சம் ரிட்டர்ன்கள் செட்டில் செய்யப்பட்டன


தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ஜூலை 28, 2022 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22.94 லட்சம் ரிட்டர்ன்களை செட்டில் செய்தது என்று கூறினார். தன்னார்வ இணக்கத்தை எளிதாக்குவதற்கும், சட்ட மோதல்களைக் குறைப்பதற்கும், இ-ஃபைலிங் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை (ITR-U) தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் வரி செலுத்துவோர் தொடர்புடைய காலம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் தங்கள் வருமானத்தைப் புதுப்பிக்கலாம் என்றும் CBDT தலைவர் கூறினார்.


மார்ச் 31 வரை 24.50 லட்சம் கோரிக்கைகள் செட்டில் செய்யப்பட்டுள்ளன


மார்ச் 31, 2023 -க்குள், 24.50 லட்சத்திற்கும் அதிகமான புதுப்பிக்கப்பட்ட ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் வரியாக சுமார் 2,480 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், அதிகாரி மற்றும் வரி செலுத்துவோர் நேருக்கு நேர் சந்திக்கமாலேயே நான்கு லட்சத்துக்கும் அதிகமான மதிப்பீடுகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் குப்தா தெரிவித்தார். முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 2022-23ல் 'ஃபேஸ்லெஸ்' செயல்முறை தொடர்பான புகார்கள் 60 சதவீதம் குறைந்துள்ளது. 'ஃபேஸ்லெஸ்' முறையின் கீழ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முறையீடுகளை வரி அதிகாரிகள் தீர்த்து வைத்துள்ளதாக குப்தா கூறினார்.


கூடுதல் தகவல்:


தவறான ITR படிவத்தைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?


உங்கள் ITR ஐ தாக்கல் செய்வதற்கு முன் சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறான வரி அறிக்கை படிவத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை உங்களுக்கு வரி அறிவிப்பை (tax notice) வழங்கும். வரித் துறையின் பொருத்தமான வரி அறிக்கை படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஐடிஆர் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | வருமான வரி தாக்கல் செய்யும் போது ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ