தமிழர் முறைப்படி ஜப்பான் ஜோடிக்கு மதுரையில் திருமணம்!
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதுகொண்ட பற்றினால் ஜப்பான் ஜோடிகள் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதுகொண்ட பற்றினால் ஜப்பான் ஜோடிகள் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
யூடோ மற்றும் சிகாரோ இருவரும் ஜப்பானை சேர்ந்தவர்கள், இதில் சிகாரோ ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று வருகிறார். இதுதொடர்பாக அவர் தமிழகத்திற்கு வந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் மதுரையை சேர்ந்த விநோதினி என்பவர் தமிழ் கற்றுத்தருகிறார். அவரிடமிருந்து தமிழ் கற்று சிகாரோ தமிழ் பெண்ணாகவே மாறினார்.
இந்நிலையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பிய சிகாரோ யூடோவின் வீட்டார் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.
தமிழ் முறைப்படி திருமண அழைப்பிதழ், விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து வரவேற்பு என தமிழ் முறைப்படியே அனைத்தும் நடைபெற்றன.